மானாமதுரை மதிமுக.மேற்கு ஒன்றியச்செயலாளர் பதவியை அலங்கரித்தவரும், சிவகங்கை மாவட்ட மாணவரணி செயலாளர் பதவியில் முன்னிற்றவருமாகிய அன்புக்கிரிய சகோதரர் ராம்நாத் அவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள் என்ற செய்தி மிக்க மன வேதனையை தருகிறது. கழகத்திற்காக பாடுபட்ட உண்மையான வீரன் என்ற செய்தி அறிந்தேன்.
சகோதரர் பல பதவிகளை அலங்கரிக்க வேண்டியவர். முன்னணி தலைவர்களின் பாசத்திற்குரியவர் இன்று நம்முடன் இல்லை என்ற செய்தி நம்பமுடியாததாகவே இருக்கிறது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் இறைவனை வேண்டுவதோடு, அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment