மது விலக்குகோரி தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவரும் வேளையில், சென்னை சேப்பாக்கத்தில் முழு மதுவிலக்கிற்காக மாற்றுதிறனாளிகள் போராடி வருகின்றனர். வருங்கால சந்ததியினரை காக்க மதுவிலக்கிற்காக போராடி வரும் மாற்றுத்திறனாளிகளை வைகோ அவர்கள் இன்று மாலை 3.30 மணிக்கு நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். உடன் மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் அவர்களும், திருப்பதிசாய் அவர்களும் மற்றும் கழக கண்மணிகளும் இருந்தனர்.
மதிமுக இனையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment