கோவையில் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி புரட்சிகர இளைஞர் முன்னணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்களையும், இளைஞர்களையும் காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினர். மேலும், வாகனத்தில் ஏற்றிய பின்னும் வாகனத்தில் வைத்தே மாணவர்களின் மீது காவல்துறையினர் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டனர். இது இளைஞர்களைடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இப்படி கொடுரமாக தாக்குவதற்காகவா காவல்துறை நிறுவப்பட்டுள்ளது. மக்களை காப்பதற்கு அல்லவா நிறுவப்பட்டிருக்கிறது. எனவே அதிமுக அரசுக்கு இறுதி அத்தியாயத்தை மக்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். போவதற்கு முன்னர் மக்களை ஒரு வழி பார்த்துவிடலாம் என நினைத்தால் இளைஞர், யுவதிகள் சும்மா இருக்கமாட்டர்கள் என எச்சரிப்பதோடு, கொடுரா செயல் புரிந்த காவல்துறைக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் மிகுந்த கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment