நேற்று குமரி மாவட்டம் உண்ணாமலைகடையில் நடந்த மதுவிலக்கு போராட்டத்தில்
நாலு மணி நேரமாக அலைபேசி கோபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாளை
கீழே இறங்க நடவடிக்கை எடுக்காமல் கடைசியில் அவரை கீழே இறக்க அவரது உடலில் கயிறு கட்டி
கீழிறக்கும்போது மயக்க நிலையிலே இறந்துள்ளார். இது தமிழக மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை
ஏற்படுத்தியுள்ளது.
இன்னிலையில் இன்று காலை மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்களின் தாயார்
95 வயதான மாரியம்மாள் அவர்கள் அவரின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் இருக்கும் டாஸ்மாக்
மதுகடையை மூட வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் 100 க்கும் மேற்பட்ட
பெண்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் என
1000 த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு மாரியம்மாள் தலைமையில் மதுக்கடையை மூட வலியுறுத்தி
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது மகனும் வைகோவின் தம்பியுமான ரவிச்சந்திரன்
உடனிருந்தார்.
அலைபேசி கோபுரங்களில் ஏறி சிலபேர் போராட்டம் நடத்தகூடும் என அஞ்சிய
காவல்துறையினர், கோபுரங்களுக்கும் காவலில் ஈடுபட்டிருந்தனர். பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு
நேரலையில் செய்திகளை பரப்பினர்.
கலிங்கப்பட்டி யில் மதுக்கடையை மூடும் போரட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளதை அடுத்து வைகோ அவர்கள்
சென்னை திருவள்ளூர் மதிமுக மாவட்ட பொது உறுப்பினர் செயற்கூட்டத்தை முடித்துவிட்டு கலிங்கப்பட்டி
திரும்பினார். இத்தகவலை அறிந்த காவல்துறை வைகோ கலிங்கப்பட்டி ஊரில் நுளையகூடாது என
அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
தலைவர் வரும் வழியான அவரை ஊரில் நுளையவிடாமல், திருவேங்கடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்திருக்கிறார்கள்.
அதனால் சுற்று வட்டார கிராம மக்கள் அனைவரும் தற்போது கலிங்கப்பட்டியில். கட்டுக்கடங்காத கூட்டமாக கூடிவிட்டனர்.
எந்த தடைகளை விதித்தாலும் தடைகளை சுக்கு நூறாக உடைத்தெறியும்
வல்லமை படைத்த தலைவன் பிறந்த ஊருக்கு வர ஓராயிரம் வழியிருக்க அதன் மூலம் கலிங்கப்பட்டி
வந்தடைந்தார். தலைவர் வந்ததும் தாயார் மாரியம்மாள், தம்பி ரவிச்சந்திரன் மற்றும் சொந்த
ஊர் மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் வியுகங்கள் வகுக்கப்பட்டு
தலைவர்
நாளையும் போராட்டம் தொடரும் எனவும், நிரந்தரமாக மதுபான கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் எனவும் தலைவர் வைகோ அறிவித்தார்கள்.
மறுமலர்ச்சி மைக்கேல்
No comments:
Post a Comment