இன்று காலை மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்களின் தாயார் 95 வயதான மாரியம்மாள் அவர்கள் அவரின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் இருக்கும் டாஸ்மாக் மதுகடையை மூட வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் என 1000 த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு மாரியம்மாள் தலைமையில் மதுக்கடையை மூட வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாரியம்மாள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment