நாட்டின் 9 பிரதமர்களையே கேள்விகணைகளால் விரட்டி கேட்டு கடைசியில் குட்டிச்சுவராகி கலிங்கப்பட்டியில் மதுக்கடைக்கு எதிராக போராடும் நிலைக்கு வைகோ தள்ளப்பட்டுவிட்டார் என்று வாயால் வடை சுடும் அதிமுகவின் பினாமி இன்னோவா சம்பத் கூறியுள்ளார்.
இன்னோவாவிற்கு மேலும் ஜாக்குவார், பென்ஸ் போன்றவை கிடைப்பதற்காக அரும்பாடுபடுகிறார் நாஞ்சில் என்னும் பெயரை நஞ்சாக்கிய சம்பத். கலிங்கப்பட்டியில் அம்மையார் மாரியம்மாள் யாரிடமும் சொல்லாமல் வந்து மதுக்கடையை மூட போராடினார் என அனைத்து ஊடகங்களும் திரையிட்டு காட்டியபிறகும் கண்ணாடி அணியாமல் பார்த்துவிட்டு குறை கூறுவது சம்பத்தின் அநாகரீகமான செயலாகும்.
மேலும் தன் சொந்த ஊரில் மதுக்கடையை மூட தனது வீரத்தாயே முன் நிற்கிறார் என கேள்விபட்ட மகன் தாயின் வீரத்திற்கு தானும் ஆதரவு தரவேண்டும் என தலைநகர் சென்னையில் காலையில் பொது உறுப்பினர் கூட்டத்தை முடித்து இரவிலே கலிங்கப்பட்டி வந்து ஊர்மக்கள் படை சூழ குழுமியிருந்த கூட்டத்தில் தானும் ஊர் குடிமகன் என்ற முறையில் போராட்டத்தில் பங்கெடுத்து மக்கள் அடாவடியில் இறங்கிவிட கூடாது என கண்டிப்புடன் கூறி அமைதியாக அறவழியில் போராட்டத்தை எடுத்து சென்றதை ஊடகங்கள் நேரலையாக வெளியிட்டுக்கொண்டிருந்தபோது சம்பத் நினைவில்லாமல் கோமாவில் இருதிருப்பாரோ என்ற கேள்வி எழுகிறது?
அந்த அம்மையார் மாரியம்மாள் முன்னெடுத்த போராட்டம் வீரியமாக மாணவர்களால், பல அரசியல் கட்சிகளால், தன்னார்வ தொண்டு நிறுவனங்களால், பல சமூக இயக்கங்களால் வெற்றி நடை போடுகிறதை பொறுக்க முடியாத அரசு எங்கு மதிமுகவிற்கு பெயர் கிடைத்துவிடுமோ என அஞ்சி போராடிய மாணவர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு புழல் சிறையிலே அடைத்து இரும்பு கம்பிகளால் அடித்து கொடுமைப் படுத்துகிறது.
9 பிரதமர்களை கேள்விகணையால் துளைத்தெடுக்க பிரதமர்களே பயந்து ஓடியதை நன்கறிந்த சம்பத் மறுமலர்ச்சி திமு கழகத்தில் இருந்த போது அவர்தான் (வைகோ) தலைவன் என்று நெஞ்சம் நிமிர்த்து நடந்த நாட்களை மறந்து கூனி கிழவியை போல இப்போது நடப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இருக்கும் இடத்திற்கு போல நிறத்தை மாற்றி உண்மைக்கு புறம்பாக எதையும் கூற கூடாது.
தமிழகத்தில் யாராவது சாகமாட்டார்களா என காத்துகிடக்கிறார் வைகோ என சம்பத் கூறியுள்ளார். மதுவின் பிடியினால் பல குடும்பங்கள் தங்கள் கண்வன்மார்களை இழந்து தவிப்பதை பார்த்து மனம் நொந்துபோன வைகோ, பிள்ளைகள் குடியினால் சண்ட சச்சரவில் ஈடுபட்டு கொலையுண்டு குடும்பமே குடிமுழுகி போனதை கண்ட வைகோ, மதுவினால உடல் நலம் கெட்டு மருத்துவ வசதியில்லாம நாளும் செத்துக்கொண்டிருக்கின்ற மக்களை பற்றி கவலைபட்டுகொண்டிருக்கின்ற வைகோ, மதுவின் தீமையை அறிந்த மதுவை ஒழிக்க அயராது உழைக்கும் வைகோ, தன் சொந்த மக்கள் சாவிற்கு காத்துகிடக்கிறார் என சொல்வது நாக்கு இருந்தால் எதைவேண்டுமானாலும் பேசலாம் என நினைப்பதா. நாவடக்கம் வேண்டும் சம்பத்திற்கு.
இறந்தவர்களுக்கு செய்யும் மரியாதையை கொச்சைப்படுத்துவது மனிதநேயமற்ற செயலாகும். எதிரியின் இறப்புக்கு கூட கவலைப்பட்டு மரியாதை செய்வதுதான் மனிதநேயமுள்ள நாகரீக செயலாகும். அப்படிதான் தலைவர் வைகோ அவர்கள் அனைத்து மக்களையும் தன் குடும்பம் போல இறப்பில் கடைசி மரியாதை வரை செய்கிறார்.
மறைந்த உலகமே போற்றுகின்ற மேதை அப்துல் கலாம் அவர்களின் இறப்புக்கு தொடக்கம் முதலே இறுதிவரை நின்று அனைத்து காரியங்களையும் செய்தார். ஆனால் வைகோவை இறுதிசடங்கில் பங்கேற்க விடகூடாது என கங்கணம் கட்டி மத்திய அரசு உதவியுடன் பாஸ் வழங்க மறுத்தார்கள். இதையறிந்த கலாம் குடும்பத்தினர் வைகோ எங்கள் குடும்பத்தார். அவருக்கு பாஸ் வழங்க வேண்டும் என கூறி பாஸ் கிடைக்கப்பெற்றார். அப்படி அவர் அனைத்து குடும்பங்களின் இதயத்திலும் குடிகொண்டிருக்கிறார்.
நாடே போற்றுகின்ற பெருமகனுக்கு அஞ்சலி செலுத்த உலங்கு வானூர்தியில் வந்து அரை மணி நேரம் செலவிட உடல் நலம் ஒத்துளைக்கவில்லை, ஒன்றரை மணி நேரம் காத்திருந்து பூங்கொத்தும் கொடுத்து, 40 தொகுதியும் கொடுத்து, சிறை வாசம் மீண்டும் வேண்டாம் என யாசகம் செய்ய உடல் நலம் ஒத்துளைத்திருக்கிறதே.
கலாமின் இறுதி மரியாதையில் தமிழக முதல்வர் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் செய்தார்கள். அதை அனைத்து செய்திதாள்களும் பெரிய செய்தியாக வெளியிட்டிருந்தன. இதையாவது சம்பத் அறிவாரா?
இறந்தவர் சசிபெருமாள் மது ஒழிப்பிற்காக தனது வாழ்நாள் முழுதையும் அற்பணித்து போராட்ட களத்திலே இறந்த தியாகிக்கு மணி மண்டபம் கட்டுவதில் என்ன தவறு இருக்கிறது. அவர் மதுவின் தீமையை மக்களுக்கு விழிப்புணவு மூலமும், குடிகாரர்களின் காலில் விழுந்தும் குடியின் தீமையை மக்களுக்கு உணர்த்திய மகான் அல்லவா. மக்களின் தீமைக்காக போராடி உயிர் நீத்தவருக்கு அவரின் நினைவில் தமிழக அரசல்லவா மணி மண்டபம் கட்ட முன்வந்திருக்க வேண்டும். ஆனால் வைகோ உட்பட தலைவர்கள் 5 லட்சம் கொடுத்து மூன்னோடியாக செயல்பட்டதில் என்ன தவறு இருக்கிறது. இதை சம்பத் சிந்திக்க வேண்டாமா?
உப்பிலியாபுரம் வீரப்பன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், நொச்சிப்பட்டி தண்டபாணி ஆகியோருக்கு வைகோ மேடை தோறும் அவர்களின் நினைவுகளை புகழ்ந்து மாநாடுகளிலும், தொடக்க விழாக்களிலும் அவர்களின் புகைப்படங்களை வைத்து பூஜிக்கிறாரே! அதை கண்கூடாக பார்த்த சம்பத்துக்கு கண்ணின் இரு விளிகளும் ஒன்றோடொன்று சண்டையிட்டு விலகிவிட்டனவா?
ஒரு நிறுவனத்தின் ஏஜென்சியை சொந்த பெயரில் எடுத்து பினாமி இல்லை என அனைவருக்கும் தெரியபடுத்தி முறையாக செயல்படுத்துவது அனைவருக்கும் தெரிந்ததே ஆனாலும், ஒளிவு மறைவில்லாமல் தன் மகனை பற்றி பத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்தாரே வைகோ. அதே போல கூன்பாண்டிகளாக இருக்கும் உங்கள் அமைச்சரவையோ, கொடநாட்டு உரிமையாளர் ஜெயலலிதாவோ கொடநாடு எப்படி அபகரிக்கப்பட்டது என்று பத்திரிகையாளரிடத்தில் வெளிப்படையாக கூற இயலுமா. அதை நன்கறிந்த சம்பத்தான் கூற இயலுமா?
மேலும் இது போல தமிழகத்திற்காக தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்தும் பொன்விழா கண்ட தலைவரை, பொன்விழா கொண்டாட விரும்பாத பெருமை மிக்க தலைவரை விமர்சித்ததற்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் சம்பத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துகொள்வதோடு சம்பத்திற்கு நாவடக்கம் வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment