மதுவிலக்கிற்காக போராடிய
சசிபெருமாள் உயிரிளப்பு பேரதிர்ச்சியை கொடுத்த நிலையில் முழு மதுவிலக்கு அமுல்படுத்த
கோரியும், கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும் 95 வயதானவரும் வைகோவின்
தாயாருமான மாரியம்மாள் தலைமையில் போராட்டம் நேற்று தொடங்கியது. அது இரண்டாவது
நாளாக இன்றும் நடைபெற்றது.
அப்போது வைகோ அவர்கள், "ஏதோ
ஒரு போராட்டக்களத்தில் தான் என் உயிர் பிரியப் போகிறது. அது என் தாய் மண்ணான
கலிங்கப்பட்டியில் போகட்டும். சாராய ஒழிப்பு என்ற போராட்டத்தில் போகட்டும்"
என்று அறிவித்து விட்டுத் தான் களத்திற்கே வந்தார்.
தொண்டர்களை களத்தில்
இறக்கிவிட்டு ஏசி அறையில் அமர்ந்து அரசியல் செய்யும் தலைவர்களுக்கு மத்தியில்
தொண்டனோடு தொண்டனாய் களத்தில் நின்றார் வைகோ. பின்னர் தொண்டர்களுடன் ரோட்டில்
அமர்ந்தும் போராட்டம் நடத்தினார். இந்நிலையில்தான் கலிங்கப்பட்டியில்
அலைபேசி டவர் மேல் ராமலிங்கம் என்பவர் ஏறி நின்று போராடினார்.
அந்த சிறுது நேரத்தில் தொண்டர்கள் வேகமாக பாய்ந்து டாஸ்மாக் கடையை அடித்து
நொறுக்கினர்.
அமைதியான முறையில் நடந்து
கொண்டிருந்த போராட்டத்தை,வன்முறைக்குப் பாதைக்குத் திருப்பியதோடு, "ஆறு முறை
அவரைக் குறிவைத்து கண்ணீர் புகை குண்டு வீச்சு" " கற்களைக் கொண்டு
எறிந்து காயம் உண்டாக்குதல்""வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு
மிரட்டல்" "கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் வை.ரவிச்சந்திரன் அவர்களை
அடித்து மண்டையை உடைத்து" "ஆயிரக்கணக்கான பொதுமக்களைத் தாக்கியது"
போன்ற களேபரங்களையும் செய்து வெறியாட்டம் ஆடியுள்ளது சாராயக்கடையை நடத்தும் தமிழக
அரசின் காவல்துறை.
இதில் தூத்துகுடியில்
சுற்றுபயணத்தில் இருந்த திருமாவளவன் அவர்களும் தலைவருக்கு அலைபேசியில்
அழைத்துவிட்டு கலிங்கப்பட்டி வந்தது கலிங்கப்பட்டி போரட்ட களத்தில் மக்கள் தலைவர்
வைகோ அவர்களுடன் கலந்துகொண்டார். அப்போது திருமாவளவனை பார்த்து தலைவர் வைகோ
அவர்கள் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்றார்.
இந்த
அடக்குமுறையை கையாண்ட பின்னர் எஸ்பி விக்கிரமன் வைகோ அவர்களிடம் வந்தார்.
இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வைகோ அவர்கள் எஸ்பி விக்கிரமனை
பார்த்து உங்களுடைய அலட்சியம் தான் காரணம் உடனே போய்விடுங்கள் என்று சொல்லி
திருப்பி அனுப்பி விட்டார். பின்னர் வைகோவுடன் டிஐஜி முருகன் பேச்சுவார்த்தை
நடத்தினார். பின்னர் தலைவர் போலீசாரை போக சொல்லிவிட்டு பொதுமக்களையும் கலைந்து
செல்லுங்கள் என்றார். கைது செய்ய வேண்டுமென்றால் பெயரை கொடுங்கள் நாங்களே
வருகிறோம் என்று தலைவர் வைகோ கூறீனார். மக்கள் கலைந்து சென்றனர்.
பின்னர்
தலைவரும் திருமாவளவனும் கலிங்கப்பட்டி வீட்டிற்கு சென்றனர். கழக நிர்வாகிகளும்
உடனிருந்தனர். திருமாவளவன் அவர்கள் வைகோவின் தாயாரிடம் பொன்னாடை போர்த்தி
ஆசிபெற்றார். பின்னர் திருமாவளவன் விடைபெற்றார்.
No comments:
Post a Comment