சசி பெருமாள் அவர்களின் 9 வயது மகள் கவியரசி தந்தை இறந்து 2 நாட்கள் ஆகியும் அவர் முகத்தை பார்க்கவில்லை. பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. 2 நாட்களாக அழுது அழுது கண்ணீர் வற்றி விட்டது. இன்று தனது தந்தையின் கோரிக்கையான மதுவிலக்கு கோரிக்கைக்காக தானும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று தனது அண்ணன் விவேக்குடன் வந்துவிட்டாள். கைதும் செய்யப்பட்டுவிட்டாள்.
பள்ளி கல்லூரி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அருகே அமைந்துள்ள சாராயக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்பது தான் கோரிக்கை. இந்த கோரிக்கையில் என்ன தவறு இருக்கிறது? நம் வீட்டு பிள்ளைகள் படிக்கும் பள்ளி அருகே குடிகாரர்கள் உலவினால் எப்படி இருக்கும்? நம் புனித வழிபாட்டு தளங்கள் அருகே குடித்து விட்டு கும்மாளம் அடித்தால் எப்படி இருக்கும்? அதை தடுக்க நாம் என்ன செய்தோம்?
சசிபெருமாள் உயிரை கொடுத்தார். அவரது உடலை கூட வாங்கிக்கொள்ளாமல் அவரது மூத்த மகனும் இளைய மகளும் இன்று அதே கோரிக்கைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதில் அதிமுக அரசின் நிலைப்பாடு தான் என்ன? பள்ளி அருகே சாராயக்கடை இருப்பது சரி என்று சொல்கிறார்களா? வழிபாட்டுத்தலங்கள் அருகே குடிகாரர்கள் உலவுவது நல்லது என்று சொல்கிறார்களா?
"ஏன் இந்த மயான அமைதி..... தமிழகத்தை சுடுகாடாக மாற்றவா?"
அரசாங்கத்தின் இந்த சாராய வியாபாரத்தை எதிர்த்து இன்று 9 வயது சிறுமி கைதாகி உள்ளார். இது இந்த போராட்டத்தின் முடிவல்ல. அதிமுக அரசாங்கத்தின் அழிவு.
சசிபெருமாள் மகன், மகளுடன் சட்ட பஞ்சாயத்து தலைவர் சிவ இளங்கோ மற்றும் பொது செயலாளர் செந்தில் ஆறுமுகம் உட்பட்ட சட்ட பஞ்சாயத்து நிர்வாகிகளும் கைதாகி இருக்கிறார்கள்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment