எனது அன்பிற்கினிய மதிமுக இணையதள அணி நண்பர்களே வணக்கம்!
தமிழகத்தின் வாழ்வாதாரங்களை, வருங்கால தலைமுறைகளை பாதுகாக்க எந்நாளும் சிறுதும் ஓய்வில்லாமல் போராடிக்கொண்டிருக்கும், ஆதாயம் தேடாத ஆகாயம், நம்முடைய இதயத்திலும் உணர்விலும் நீங்கா இடம்பெற்றிருக்கும், மக்கள் தலைவர் நமது கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை மதிமுக தொடங்கிய நாளிலிருந்தே தலைவரின் கொள்கைகளை பின்பற்றியும், கழகத்தின் கண்மணிகளுடன் கழக தொடக்கம் முதல் இன்று வரை உறுதியோடு பணியாற்றிக்கொண்டிருக்கும், கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர், ஓமன் மதிமுக இணையதள அணியின் தலைமை உறுப்பினர் ஆருயிர் சகோதரர் ஜகுபர் அலி அவர்கள் ஓமன் நாட்டின், டுக்கும் என்னும் இடத்திலே பணியாற்றிகொண்டிருக்கிறார்.
அண்ணன் ஜகுபர் அலி அவர்கள் "STRABAG" (Construction Company) என்னும் நிறுவனத்தில் (Concrete Section Labour) கான்கிரீட் பிரிவில் வேலை செய்து வருகிறார். அவருக்கு இந்த கான்கிரீட் நிறுவனத்தில் வேலை பார்ப்பதால் அவரது உடல் முழுக்க படர்ந்த புண் ஏற்படுகிறது. அந்த புண்ணானது கை, கால், மற்றும் உடலின் அனைத்து பாகங்களிலும் காணப்படுகிறது. இதன் புகைப்படத்தையும் இணைத்துள்ளேன். சில உடல் பாகங்களின் புகைப்படங்களை இணைக்க முடியாது. அப்படி பட்ட அனைத்து இடங்களிலும் படர்ந்து புண் காணப்படுகிறது. அந்த புண் அவருக்கு அரிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் அவர் அரிப்பு ஏற்படுகின்ற இடத்தில் தடவும் போது (சொறியும்போது) இரத்த கசிவு ஏற்படுகிறது. இதனை நிர்வாகம் கவனித்து வருவதால் சுற்றியிருப்பவர்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல என எண்ணுகின்றனர். ஏனென்றால் இந்த புண்ணானது வெளிப்புறத்திலும் தெரிகிறது. இதை சரிபடுத்த தனது உடல் நிலையை சரி செய்வதற்காக சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வீரமங்கலம் ஊராட்சியின், முள்ளியான் வயல் என்னும் கிராமத்திற்கு சிகிச்சைக்காக சென்று வந்துகொண்டிருந்தார். ஆனால் அவரது நோயும் தீர்ந்தபாடில்லை, வேலை செய்யும் பணத்தை கொண்டு இங்கு மருந்து வாங்க கூட இயலாத நிலைமை ஏற்படுகிறது. அவர் பணியாற்றுகின்ற நிர்வாகமும் அவரை சொந்த நாட்டிற்கு அனுப்ப திட்டம் செய்துகொண்டிருக்கிறது.
ஓமன் நாட்டை பொறுத்தவரை இப்போதைய விதிகளின் படி, ஒருவர் வேலையை இழந்தால் மீண்டும் ஓமன் நாட்டிற்கு 2 வருடத்திற்கு நுளைய இயலாது. எனவே அண்ணன் ஜகுபர் அலி அவர்கள் வருகிற ஆகஸ்ட் மாதம் விசா காலாவதி ஆகும் போது அவர் பணி செய்யும் நிர்வாகம், அவரது விசாவை புதுப்பிக்காது. அந்த நிலையில் அவர் கட்டாயமாக இந்தியா அனுப்பபடுவார். ஒருவேளை விசா கால அவதி முடிவதற்கு முன்பாகவும் தாயகம் அனுப்பபடுவார்.
அவர் தாயகம் சென்றால் அவரது உடலின் வெளிபாகங்களில் தெரியும் புண்களால், அவர் சிறு வேலை கூட செய்ய முடியாத சூழ்நிலை, அவரின் மருத்துவ செலவிற்காக செலவிட்ட ஏகப்பட்ட கடன் தொல்லைகள், குடும்ப செலவு என அனைத்திற்கும் மத்தியில் தனியாக ஓமனில் போராடிக்கொண்டிருக்கிறார்.
அண்ணன் ஜகுபர் அலி அவர்களுக்கு சொந்த கிராமத்திலும் அவருக்கு உதவி செய்ய ஆளில்லை என தெரிவித்தார். ஏனென்றால் அவரது குடும்பங்களும் அன்றாடம் வேலை செய்து குடும்பம் நடத்த சூழ்நிலையில் இருக்கிறார்கள். அண்ண ஜகுபர் அலி அவர்களுக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இளைய குழந்தை 4.1/2 வயது. மூத்த பிள்ளை 10 வயதானவள் பள்ளிக்கு செல்கிறாள். படிப்பில் கெட்டிகாரி. மூத்தப் பெண்பிள்ளையின் பெயர் தலால் ஆஸ்மின். இந்த பெயர் வைத்ததற்கு காரணம் தலைவர் வைகோ அவர்களின் மீதான் பற்றும் நம்பிக்கையும்தான்.
தலால் ஆஸ்மின் என்பது குவைத் நாட்டை சார்ந்த அரபு குடும்பத்தை சார்ந்த ஒரு பணக்கார வீட்டு பெண். அந்த வீட்டிற்கு நமது ஆந்திராவை சார்ந்த காதர் பாட்சா என்னும் இளைஞர் ஓட்டுனர் வேலைக்காக சென்றார். அப்போது அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு அந்த குவைத் பெண் கர்ப்பமானார். இந்நிலையில்தான் அந்த குவைத் நாட்டுப்பெண் அங்கு பணி செய்யும் இந்திய இந்திய பெண்ணின் கடவுசீட்டை பயன்படுத்தி(இரு பெண்ணின் தோற்றம் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்ததால்), காதர் பாட்சாவுடன் இந்தியாவிற்குள் நுளைந்தார். ஆந்திரா செல்ல சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்தார்கள். அப்போது அவர்கள் கடவு சீட்டை சோதனையிட்டு போலீசார் குவைத் நாட்டு பெண் தலால் ஆஸ்மினை கைது செய்தனர்.
அப்போது தலைவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது குவைத் நாட்டினர் அந்த பெண்னை திரும்ப குவைத்திற்கே அழைத்து செல்ல இந்திய அரசிடம் பேசினர். ஆனால் தலால் ஆஸ்மின் குவைத் போக மறுத்து தனது கணவர் காதர் பாட்சாவுடனே வாழ விரும்பினார். அந்த பெண்னை குவைத்திற்கு அழைத்து சென்றால் அந்த நாட்டு சட்டத்தின் படி தலால் ஆஸ்மினை கல்லால் அடித்தே கொலை செய்வார்கள். இந்த நிலையில் தான் பாராளுமன்றத்திலே இந்த தலால் ஆஸ்மின் விவகாரத்திலே, தலைவர் வைகோ அவர்கள் உணர்ச்சிகரமான வாதங்களை எடுத்து வைத்தார். அப்போது பெருமதிப்பிற்குரிய வாஜ்பாய் அவர்கள் தான் பிரதமர். குவைத் பெண்ணின் வயிற்றில் வளர்வது ஒரு இந்திய நாட்டின் குழந்தை, அது இந்தியனாக பிறக்கும். எனவே அந்த பெண் தலால் ஆஸ்மினை இந்திய திருநாட்டில் குடும்பம் நடத்த அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார். அப்படிபட்ட மனிதநேயமிக்க தலைவரின் வாதத்தினால்தான், தலைவரின் மேல் மட்டற்ற அன்பை கொண்டிருந்த அண்ணன் ஜகுபர் அலி, அந்த குவைத் பெண்ணின் பெயரை தனக்கு பிறந்த முதல் குழந்தைக்கு தலால் ஆஸ்மின் என பெயரை சூட்டினார். அந்த பெண் தலால் ஆஸ்மின் இப்போது ஆந்திராவில் வசித்துக்கொண்டிருக்கிறார்.
மதிமுக தொடங்கிய நாளிலிருந்தே தலைவரின் மீதும், கழகத்தின் மீதும் மிகுந்த மரியாதையை வைத்திருந்தார். சென்னையில் தேனீர் கடையில் வேலை பார்க்கும்போது, தலைவரின் நடைபயணம், தலைவரின் பொதுக்கூட்டங்கள் என அனைத்திலும் பங்கு பெற்றவர். பத்து வருடத்திற்கும் மேலாக சென்னையில் கழகத்திற்காக பணியாற்றியவர், இப்போதும் தலைவரின் சிந்தனைகளை தாங்கியே காலத்தை கடத்துகிறார். இப்படிபட்ட அண்ணனுக்கு இப்படிபட்ட கழகத்தின் கண்மணிக்கு இப்போது சோதனையான காலமாக அமைந்திருக்கிறது.
மேலே கூறியபடி அண்ணன் தாயகம் சென்றால் குடும்ப சூழலில் வேலை செய்ய முடியாமலும், குடிம்பத்தை காப்பாற்ற முடியாமலும், குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாமலும் திணறிக்கொண்டிருக்கிறார். நான் பேசியபோது அவருக்கு தானி (ஆட்டோ ரிக்க்ஷா) ஓட்ட தெரியும் என்று கூறினார். அவரது உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளால் வெளியில் வேலை செய்ய முடியாததால், தாயகம் திரும்பியதும், அவர் குடும்பம் தழைக்க, அவர் சேமிக்கும் பணத்தையும், மதிமுக இணைய நண்பர்கள் எதாவது உதவி செய்தால் அவர் ஒரு தானி (ஆட்டோ) வாங்கி, கழகத்தின் கண்மணிகளின் கருணையால் தனது குடும்பத்தை செழுமைப்படுத்துவார்.
எனவே கழகத்தின் கண்மணிகளே, மதிமுக இணையதள நண்பர்களே! அண்ணன் ஜகுபர் அலி வாழ்வில் ஒளியேற்ற, தங்களால் இயன்ற உதவியை செய்தால் ஒரு குடும்பத்தை தழைக்க செய்த மகிழ்ச்சியும், மன நிறைவும் நம் அனைவருக்கும் இருக்கும். அண்ணன் ஜகுபர் அலியும் தொடர்ந்து கழகத்திற்காக பணியாற்ற அவருக்கும் நாம் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக இருக்கும். தங்களால் முடிந்த ₹100, ₹200, ₹500, ₹1000 ரூபாயோ, எவ்வளவாக இருந்தாலும் தங்களால் ஆனதை கொடையளிக்குமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் மதிமுக இணையதள அணி நண்பர்களான உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த பதிவை அனைத்து நாடுகளில் வாழும் மதிமுக இணையதள அணி நண்பர்களுக்கும் பகிருமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன்.
நண்பர்களே! கழகத்தினர் என்று பாராமல் இருந்தாலும் மனிதநேயத்தோடு அண்ணன் ஜகுபர் அலிக்கு உதவுமாறு அன்பாய் கேட்டுகொள்கிறேன்.
கொடையளிக்கும் வங்கி கணக்கு இதில் இணைத்துள்ளேன்.
J.JAGAR BANU, A/C NO : 872589740, AVADAYAR KOVIL-1414, INDIAN BANK, PUDUKKOTTAI DISTRICT, TAMILNAADU
இந்த வங்கி கணக்கானது அண்ணன் ஜகுபர் அலி அவர்களின் துணைவியார் பெயரில் இருக்கிறது என்பதையும் அன்போடு தெரிவித்துகொண்டு அண்ணன் ஜகுபர் அலி வாழ்வில் ஒளியேற்ற நாமும் ஒரு காரணமாயிருப்போம்.
இந்தியாவில் பணம் அனுப்ப இயலாதவர்கள் அண்ணன் ஜகுபர் அலியை தொடர்புகொள்ளலாம். என்னையும் தொடர்புகொள்ளலாம்.
ஜகுபர் அலி அலைபேசி இலக்கம்: +968-98713845
நன்றி!
மறுமலர்ச்சி மைக்கேல்
அலைபேசி இலக்கம்: +968-95484987
மதிமுக இணையதள அணி - ஓமன்