மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 22 ஆம் அகவையில் அதன் மாபெரும்
சாதனைகளை நிகழ்த்தி காடிய தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஏனைய கழகத்தின்
கண்மணிகள் அனைவரும் கலந்துகொள்ளும் மாபெரும் நிகழ்ச்சியானது, நாளை மாலை 7 மணி அளவில், ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதி, டாக்டர் அம்பேத்கர் திடலில்
(பரங்கிமலை இரயில் நிலையம் அருகில்) மிகப்பெரிய பொதுக்கூட்டமாக நடைபெறும்.
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ
அவர்கள் கலந்துகொண்டு கழகத்தை கட்டி காவல் தெய்வங்களான கழக கண்மணிகளிடத்தில் உணர்ச்சி
பொங்க உரையாற்றுகிறார்.
கழக தோழர்களே!
22 வருடங்களை கடக்கிறோம்.
இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக தொலைவிலே உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தல் 2016 ல் நமக்கென்று தனி இடத்தை
நாம் தக்கவைத்தே ஆக வேண்டும். ஆகடியம் செய்தவர்கள் அண்ணாந்து பாக்க வேண்டும்.
இருட்டடிப்பு செய்தவர்களின் தலைப்பு செய்திகளாக நாம் மாற வேண்டும். இவ்வளவு நாள்
உழைத்ததன் பலனை நாம் அறுவடை செய்ய வேகமாக பணி செய்வோம். 22 ஆம் அகவையிலே அதற்கான
சபதங்களை ஏற்போம். ஒரு வருடத்திற்கு குறைவாகவே நாட்கள் உள்ளன. இப்போதே நமது பணிகளை
தேர்தலுக்கான பணிகளாக தொடங்கி முன்னெடுத்து செல்வோம்.
"முயற்ச்சியெடுப்போம், முடித்து காட்டுவோம்"
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment