மதிமுக இணையதள வேங்கைகளே வணக்கம்!
நேற்று நடந்த மதிமுக 22 ஆம் ஆண்டு துவக்க விழாவில், காலை தாயக கொடியேற்றத்திலிருந்து, மாலை பொதுக்கூட்டம் தொடக்கம் முதல் இறுதி வரை நடந்த நிகழ்ச்சிகளை தனது முகநூல் மூலமாக, உடனுக்குடன் பதிவேற்றம் செய்து, வெளிநாடுகளில் வாழும் கழக கண்மணிகளும் நிகழ்விலே கலந்துகொண்டது போன்ற உணர்வை ஏற்படுத்த நிகழ்வுகளின் புகைப்படங்கள், உரையாற்றிய தலைவர்களின் உரை மையகருத்துக்களை முகநூல் மூலமாக தந்து கழகத்திற்காக அயராது பணியாற்றிய, விழா முடிவில் தலைவருக்கு வணக்கம் செலுத்த, தலைவர் இன்றைய பேச்சு நன்றாக இருந்ததா என கேட்க, சிறு தொண்டனிடம் கேட்கின்றாரே என்ற எண்ணம் மேலோங்குகின்ற அந்த வேளையில் சந்தோசத்தில் திக்கு முக்கடிப்போனார் ஆருயிர் அண்ணன், அம்மாபேட்டை கருணாகரன். அண்ணன் கருணாகரன் தலைவர் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கெடுத்து கழகத்தின் செயல்பாடுகளை உலகிற்கு அறிய செய்கிறார்கள்.
ஏற்கனவே தலைவரின் விழிகளில் நிழலாடுகின்ற அண்ணன் அம்மாபேட்டை கருணாகரன் அவர்களுக்கு நேற்றைய நிகழ்ச்சிகளை இணையத்தில் வழங்கியதற்கு ஓமன் மதிமுக இணையதள அணியின் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு, அண்ணன் அவர்கள் கழகத்தின் பல உயர் நிலைகளை அடைய வாழ்த்துதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment