தமிழகத்தின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும், வருங்கால தலைமுறை நாசமாகி போகாமல் இருக்க கொடிய விசம் போன்ற திட்டங்களை தடுத்து நிறுத்தவும் பாடுபடும் ஓய்வில்லா உழைப்பாளி, ஆதாயம் தேடாத ஆகாயம், மக்கள் தலைவர் வைகோ அவர்கள் வழி நடத்துகின்ற இயக்கம் தமிழக மக்களுக்காக நன்மையையே செய்கிறது என்று தமிழகத்தின் அனைத்து மக்களிடத்திலும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்ற வேளையில், மதிமுக ஆட்ச்சியை பிடிப்பது தமிழகத்திற்கு நல்லது என்ற நோக்கில் தனது பெட்டி கடை மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை தேர்தல் நிதியாக கொடுத்து வருகிறார் மதிப்பிற்குரிய செயராமன் அவர்கள். இவரை போன்ற காவல் தெய்வங்கள் கழகத்தில் இருப்பதனால்தான் அவர்களின் சிறு உதவியால் கழகம் இன்றளவும் தலை நிமிர்ந்து 22 ஆம் ஆண்டில் வீர நடை போடுகிறது.
எனவே மதிப்பிற்குரிய செயராமன் அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் நன்றியை தெரிவிப்பதோடு, பெரியவரின் திறன் குன்றிய கை, கால் இறைவன் அருளால் பரிபூரண குணமடைய வேண்டுமென்றும் வேண்டிகொள்கிறோம்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment