Wednesday, May 6, 2015

மதிமுக 22 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் வைகோ உரை!

மறுமலர்ச்சி திமு கழகத்தின் 22 ஆம் தொடக்க விழா பிரமாண்ட பொதுக்கூட்டமானது, காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் பகுதியில், பரங்கி மலை ரயில் நிலையம் அருகில், Dr.அம்பேத்கர் மைதானத்தில் மாலையில் நடைபெற்றது. 

அனைத்து முன்னணி தலைவர்கள் உரையாற்றிய பின்னர் கழக துணை பொது செயலாளர் அண்ணன் மல்லை சத்யா அவர்கள் வழங்கிய வாழ்த்துரையில், கத்திரிக்காய் சாம்பாரில் உப்பு போடாமல் சாப்பிடுபவன் எல்லாம் எங்களுக்கு சவால் விடுவதா என பாஜகவை கடுமையாக சாடினார்.

பின்னர் தலைவர் நிறைவுரை நிகழ்த்த தயாராக, கழகத்தின் கண்மணிகள், தலைவர் வைகோவுக்கு, நினைவுப்பரிசுகள், வீரவாள் மற்றும் ராட்சத மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தொடர்ந்து தலைவர் அவர்கள், பலியிடப்படுவதெல்லாம் ஆடுகள்தான், சிங்கங்களல்ல. என்ற முழக்கதோடு உரை தொடங்கினார். எந்த அரசியல் கட்சியும் சந்திக்காத பிரச்னைகளையும் வீழ்ச்சிகளையும் தாண்டி சாதித்தது மதிமுக. நாளை வர இருப்பது மாணவர்களுக்கான தீர்ப்பு, அரசியலுக்கான இன்னொரு தீர்ப்பு வர இருக்கிறது என ஜெயலலிதாவின் ஊழல் வழக்கை கூறினார்.


நான் மட்டுமல்ல என் கழக கண்மனிகள் அனைவருமே நேர்மையானவர்கள். தன்னலமற்றவர்கள், பிறர் நலனில் மகிழ்சி காண்பவர்கள் என தொண்டர்களை புகழ்ந்தார். எட்டாண்டுகளாக முல்லை பெரியாருக்காக போராடினோம். நாங்கள் மாசற்றவர்கள், தமிழகத்தை இன்று பிரச்னைகள் சுற்றி வளைக்கின்றன, தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. மத்திய அரசு ஒன்று இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.

59000 மாணவர்கள் கலந்து கொண்ட மதுவிலக்கு மாரத்தானில் ஓர் கட்சி கொடி உண்டா... பொதுநல நோக்கில் நடத்தினோம். விளை நெல்லே வீணாகி விடக்கூடாது என கவலைப்பட்டோம். முத்துக்குமாரசாமி தற்கொலைக்கும் முத்துகிருஷ்ணன் தற்கொலைக்கும் தமிழக அரசுதான் காரணம். அரசு ஊழியர்கள் நிம்மதி இழந்து இருக்கிறார்கள். 

பாஜக பிடியில் தமிழகத்தை உள்ளாக்கவா... மத்திய அமைச்சர்கள் வர இருக்கிறார்களா... மேகதாது அணையை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன எனவும் சராமாரி கேள்விகளை பாஜகவிற்கு வைத்தார்.


இயக்கத்தின் தொண்டர்களை நினைத்து பெருமைபடுகிறேன்... இவ்வளவு பெரிய தோல்விகளை தாங்கியும் 21 ஆண்டுகளாக தொடர்கிறார்களே! இப்படிப்பட்ட தொண்டர்கள் வேறெந்த கட்சியிலும் இல்லை. அது நடக்க போவதுமில்லை...


நேபாளத்திலே நிலநடுக்கம். பதறுகிறோம், பிரதமரும் அறிக்கை தருகிறார். 20 தமிழர்கள் படுகொலைக்கு பிரதமர் வருத்தம் தெரிவித்தாரா. கார்ப்பரேட்டுகளுக்காக மத்திய அரசு நடக்கிறது. 20 தமிழர் படுகொலைக்கான நீதிவிசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் வைக்க வேண்டும் என்ற நிபந்தனையை விஜயகாந்த் எங்களை சந்தித்த போது வலியுறுத்தினோம். 

பிரதமர் அவர்களே! நான் கோழை அல்ல. மனிதாபிமானத்தில் கண்கள் கண்ணீரை சுரக்காதா? கண்ணீர் பரிகாசத்திற்கு உரியது இல்லையா? பிரதமர் அவர்களே! குஜராத் கலவரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்ட போது டெல்லி அசாம் தெருக்களிலே கண்ணீர் ஓடியதை குறிப்பிட்ட போது அன்றிரவு நன்றி தெரிவித்தீர்களே! மறந்து விட்டீர்களா எனவும் கேள்விகளை எழுப்பினார். 

தலைவர் நிறைவுரையில் மே 17 முள்ளிவாய்க்கால் பொதுக்கூட்டம் நுங்கம்பாக்கத்திலே நடக்கிறது என தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் பொதுக்கூட்டத்தில், கழக கண்மணிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment