மறுமலர்ச்சி திமு கழகத்தின் எழும்பூர் பகுதி செயலாளர், கழகத்தின் போராட்டங்களுக்கு உயிரையும் துச்சமாக நினைத்து மக்களுக்காக போராடும் கழகத்தின் கண்மணி, ஆருயிர் அண்ணன் தென்றல் நிசார் அவர்களின் மகளின் திருமணம் தலைவர் வைகோ முன்னிலையில் இனிதே நடந்தேறியது.
தியாக தொண்டர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட மதிமுக, ஜாதி மதம் பாராத இயக்கம் என்பதை இன்று தலைவர் அவர்கள் நிரூபித்தார். திருமணத்திற்கு பின்னர் தலைவர் வைகோ அவர்கள் துணைவியாருடன் மணமக்களுக்கு புத்தக பரிசு வழங்கி வாழ்த்தினார்கள். தொடர்ந்து வைகோ அவர்கள் வழ்த்துரை முழக்கம் அரங்கேறியது.
இதில் மதிமுக முன்னணி நிர்வாகிகள், கழகத்தின் கண்மணிகள், மதிமுக இணையதள அணியின் நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மணமக்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாகவும் திருமண வாழ்த்துதலை தெரிவிப்பதோடு, மணமக்கள் ஒருவரையொருவர் புரிந்து, இல்லறத்தில் நல்லறம் கண்டு, குழந்தை செல்வங்களோடு மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறோம்.
(படங்கள் : மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் முகநூலிலிருந்து)
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment