Sunday, May 10, 2015

அன்னையர் தினத்தில் தமிழீழத்து தாய்மார்களுக்கு விடிவு வருமா!

உலகம் முழுதும் அன்னையர் தினம் திறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. தன்னை பெற்ற தாய்க்கு சிறப்பு பிரார்த்தனைகளை பிள்ளைகள் ஏறெடுக்கிறார்கள். தாய் பயன்படுத்த சிறப்பு வாய்ந்த ஆடைகளை ஆச்சரியமடைய வைப்பார்கள். குடும்பத்தில் சந்தோசமாக புது வகையான இனிப்புகளை தாயார் கையினாலே செய்து, பிள்ளைகள் உண்பதை தாய் கண்டு மகிழ செய்வார்கள்.

தாயின் அன்பினாலே தாய்மடியில் பிள்ளைகள் தலைவைத்து உறங்குவதுமுண்டு. அப்படிபட்ட தாய்மார்களுக்கு தமிழீழத்திலே கொடுமைகள் நடந்தேறியுள்ளது. அதை உலக நாடுகள் கண்டுகொள்ளாமல் இன்றளவும் வேடிக்கை பார்க்கின்றன. பெற்ற பிள்ளைகளை இழந்து ஈழத்து தாய்மார்கள் வாடுகின்றனர். அனேக தாய்மார்கள் பிள்ளைகளை தேடி அலைகின்றனர். 

80 ஆயிரம் தாய்மார்கள் ஈழத்திலே விதவைகளாக வாழ்கின்றனர். அந்த தாய்மார்களுக்கு ஆறுதல் கூற ஆள் இல்லாமல் அனுதினமும் நரக வேதனைகளை அனுபவிக்கின்றனர். இவ்வளவு கொடுமைகள் தமிழீழத்திலே நடந்த பிறகும் தமிழனுக்கென்று தனி நாடு இல்லை. கடந்த 60 ஆண்டுகளாக ஈழத்திலே அடிமைகளாகவும், வெளி நாடுகளிலே அகதிகளாகவும் அன்னையர்கள் வாழ்கின்றனர். எனவே தமிழீழ நாடு அமைத்து, தமிழீழத்தின் விடியலுக்காக பிள்ளைகளை, கணவன்களை இழந்து வாடும் அன்னையர்க்கு சிறிது மகிழ்ச்சி கிடைக்க தமிழீழம் அமைப்பது ஒன்றே தீர்வு என அன்னையர் தினத்திலே சபதம் ஏற்பதோடு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்னையர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.


மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment