ஆந்திர மாநிலத்தில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு கொடுஞ்சித்திரவதைக்கு உள்ளாக்கி 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மை அறியும் குழுவின் கள ஆய்வு அறிக்கை வெளியீடு மற்றும் மனித உரிமை கருத்தரங்கம், இன்று மாலையில் மதுரை அரசரடி இறையாண்மை கல்லூரியில், மக்கள் கண்காணிப்பகம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் மக்கள் தலைவர் வைகோ உள்ளிட்ட தமிழ்த்தலைவர்கள் கலந்து கொண்டு கள ஆய்வு அறிக்கையை வெளியிட்டனர்.
பின்னர் மக்கள் தலைவர் வைகோ போர்குரல் எழுப்பினார். ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலை புதைக்கக்கூடாது, எரிக்க வேண்டும் என தமிழக காவல்துறை மிரட்டியதேன்? இதுவரை இறந்த தமிழர்களுக்காக இதுவரை வழக்கு பதியாதது ஏன்? தையல் தொழிலாளியும், ஆசிரியர் படிப்பும் படித்தவர்கள் பலியானது எப்படி? செம்மரம் கடத்தல் மூலம் பல கோடிகள் சம்பாதித்தவர்கள் மீது நடவடிக்கை என்ன?, நான் பிறந்த தமிழ் மண்ணுக்கு பிரச்சனை என்றால் அரசியலை கடந்து நான் துணை நிற்பேன் என முழங்கினார் வைகோ.
இந்த நிகழ்வில் மேடையில் இருந்த மேசையை மக்கள் தலைவர் வைகோவும், அண்ணன் திருமாவளவனும் சரி செய்தது அனைவரையும் ஈர்த்தது.
இந்த 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான கள ஆய்வு அறிக்கை வெளியீட்டு விழாவில், மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், பழநெடுமாறன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ் வெளியிட மதுரை இறைக்கல்லூரி முதல்வர் டேவிட் ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார்:
மதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்நிகழ்வில் ஆறுதல் கூறி நிதியுதவி அளிக்கப்பட்டது
இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment