மதிமுக இணையதள முன்னோடி அண்ணன் வடசென்னை செல்வா அவர்கள் சிறுநீரக பாதிப்பால் வருத்தமான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று 26-06-2016 காலை மயக்கமடைந்தவர், சிறு அசைவும் இன்றி இரவு 10 மணி வரை இருந்தார். தன் உயிரான தலைவர் தொண்டனை காண வந்தார். அவர் உடல் நலம் பற்றி கவலையுடன் கேட்டறிந்தார். கேட்டுக் கொண்டே அண்ணன் வடசென்னை செல்வா அவர்களின் வலதுகால் மீது கை வைத்தார். அதுவரை அசைவற்றிருந்த கால் ஒரு அசைவு அசைந்தது. அதிசயம் நடந்தேறியது. உடனே தலைவர் வைகோ அவர் காதருகில் சென்று செல்வகுமார்நா ன் வைகோ வந்திருக்கிறேன் என மூன்று முறை சொன்னார்.
மேலும் மருத்துவர்களையும் விசாரித்து நல்ல முறையில் சிகிச்சை கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் வைகோ. அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
சகோதரர் வடசென்னை செல்வா அவர்கள் உடல் நலம் பெற்று எதிராளிகளுக்கு இணையத்தில் சிம்மசொப்பனமாக விளங்க அவர் மீண்டு வர வேண்டி ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் விழைகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி