Monday, August 3, 2015

பள்ளியாடியில் புதிய மதுக்கடை திறக்க முயற்ச்சி, மதிமுக ஆர்ப்பாட்டம்!

குமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் செயல்பட்டுக்கொண்டிருந்த மதுக்கடையை பள்ளியாடி பகுதியில் ஜெயலலிதா அரசு திறக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதை அறிந்த மதிமுக வாழ்வச்சகோஷ்டம் பேருராட்சி தலைவி மற்றும் அவரது கணவர் பள்ளியாடி குமார் (மதிமுக இளைஞரணி அமைப்பாளர்) அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தமிழக சட்டசபை காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணியும் கலந்துகொண்டார். 

பின்னர் மதுக்கடை திறக்க முயற்ச்சி மேற்கொள்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் மதிமுக வாழ்வச்சகோஷ்டம் பேருராட்சி தலைவி மற்றும் அவரது கணவர் பள்ளியாடி குமார் (மதிமுக இளைஞரணி அமைப்பாளர்) மற்றும் விஜயதாரணி MLA ஆகியோர் மதுகடைக்கு எதிராக போராடியதற்காக கைது செய்ய பட்டு காவலில் வைக்க பட்டனர். பின்னர் இரவில் விடுதலை செய்தனர்.

செய்தி சேகரிப்பு: ஜேன் ஜெபர்சன்

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment