Monday, August 3, 2015

முழு அடைப்புக்கு ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது!

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரியும், சசி பெருமாள் அவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டும், நாளை தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய கடை அடைப்பு போராட்டத்தை தலைவர் வைகோ அவர்கள் அறிவித்த காரணத்தால், சேலத்தை ஸ்தமிக்க வைக்கும் அளவிற்கு எவ்வாறு போராட்டம் செய்வது என்று தற்போது சேலம் மதிமுக மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் மற்றும் வக்கீல் ஆனந்தராஜ் அவர்களின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டுள்ளது. . . . . கூட்டத்தில் மதிமுக, விசிக, தேமுதிக, காங்கிரஸ், cpi, cpm, மமக மற்றும் தமிழக வணிக அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். . . . . அனைத்து கடைகளையும் அடைக்குமாறு, சேலத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் துண்டறிக்கை கொடுக்கும் பணி தொடர்ந்துள்ளது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment