மதிமுக பொதுக்குழு உறுப்பினர் v.மோகன் இல்லத்தை திறந்து வைக்க மதுரை சென்றார் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள். அப்போது தலைவருக்கு விழா வீட்டார் சார்பில் வெற்றி மாலை சூட்டப்பட்டது.
பின்னர் தலைவர் வைகோ அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் மாநில நிர்வாகி அக்கா பாண்டியம்மாள் சால்வை அணிவித்தார்!
விழா தொடங்கியது. தலைவர் வேங்கைப்புலி வைகோ அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். கலவரத்தில் என்னை காத்தான் என்தம்பி வை.இரவிச்சந்திரன். போர்க்களத்தில் பெரியமருதை காத்த சின்னமருதை போல! என் தம்பிக்கு காலில் நல்ல காயம்! என தலைவர் வைகோ உருக்கமான பேசினார். மதுகடைகளை ஒழிக்க வேண்டுமெனவும் ஆவேசமாக பேசினார்.
இந்நிகழ்வில், கழக நிர்வாகிகளான, வேளச்சேரி மணிமாறன், மருத்துவர் சரவணன், பொடா புதூர் பூமிநாதன், மாநில மாணவரணி செயலாளர் திமு ராஜேந்திரன் மற்றும் கழக முன்னணியினர் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment