நேற்று ஆகஸ்டு 7 ஆம் தேதி அன்று சேலம் இ.மேட்டுக்காடு கிராமத்தில் மது ஒழிப்புப் போராளி சசிபெருமாள் அவர்களின் நல்லடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை முறைப்படுத்துவதற்காக தியாகி சசிபெருமாள் அவர்களின் நல்லுடல் அஞ்சலி செலுத்துவோர் பார்வைக்காக வைக்கப்படும் இடம், அஞ்சலி கூட்டம் நடைபெறும் மேடை, கம்பு தடுப்புகள் அனைத்தையும் சேலம் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.கழகச் செயலாளர் தாமரைக்கண்ணன் ஏற்பாடு செய்திருந்தார். நானும், சகோதரர் திருமாவளவன் அவர்களும் அனைத்தையும் முறைப்படுத்தினோம்.
இரங்கல் கூட்ட மேடையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல அமைப்புகளின் பிரதிநிதிகள் உரையாற்றினார்கள்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நிலைநாட்டவே வாழ்நாளெல்லாம் போராடிய வீரத் தியாகி சசிபெருமாளின் இலட்சியத்தை நிறைவேற்ற தமிழகத்தில் முற்றாக மதுவை ஒழிக்க வேண்டும் என்பதே நமது இலக்கு என அனைவரும் உரையாற்றினர். அப்பொழுது சகோதரர் நல்லுசாமி மேடைக்கு வந்தார்கள். நல்லுசாமி அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை கொண்டவன். தன்னலமற்றவராக விவசாயிகளின் துயரைப் போக்குவதற்காகப் பல ஆண்டுகளாக அவர் பாடுபட்டு வருகிறார்.
டாஸ்மாக் கடைகளும், ஒயின் ஷாப்புகளும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்படும்போது, கள்ளையும் அனுமதிக்கத்தானே வேண்டும்? என்ற அவருடைய கோரிக்கையில் நியாயம் இருக்கிறது.
முற்றாகவே மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும்போது, கள்ளுக்கு அனுமதி என்பதை ஏற்க இயலாது. சசிபெருமாள் அவர்களின் இரங்கல் மேடையில் முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டால், இரங்கல் கூட்டத்தில் மோதல் என்றுதான் செய்தி வெளியாகும். அந்த மாபெரும் தியாகியினுடைய நல்லடக்க நிகழ்ச்சியின்போது அப்படி ஒரு செய்தி பரவுவது எண்ணற்ற மக்களின் மனதைக் காயப்படுத்தும் என்பதால்தான் இந்த இரங்கல் மேடையில் முற்றாக மது ஒழிப்பு என்ற கருத்தே அழுத்தமாகச் சொல்லப்பட்டு உள்ளது. அதற்கு மாறாக கள் வேண்டும் என்ற கருத்தை இங்கே பதிவு செய்துவிட வேண்டாம் என்ற நோக்கத்தில்தான் நான் கூறினேன். அதன் பின்னர் அவர் அருகிலே சென்று நலன் விசாரித்து உரையாடிக் கொண்டிருந்தேன்.
மாறுபட்ட கருத்துகளை தெரிவிப்பதுதான் ஜனநாயகம் என்பதை நான் நன்றாக அறிவேன். ஒரு புனிதமான நிகழ்ச்சியில் கருத்து மோதல் ஏற்படக் கூடாது என்பதனால்தான் நான் அவ்வாறு பேச நேர்ந்தது. அதே நேரத்தில் கள்ளைவிட, பிராந்தி, ஒயின் மேலென்று எவருமே கூறமாட்டார்கள்.
மதிப்பிற்குரிய நல்லுசாமி அவர்கள் மனம் புண்பட்டிருப்பதை உணர்கிறேன். என் பேச்சு அவர் மனதை காயப்படுத்தியதற்காக வருந்துகிறேன் என கூறினார் வைகோ.
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:
Post a Comment