2017 செப்டம்பர் 15 ஆம் நாள் தஞ்சையில் மதியம் 1 மணிக்கு 109 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு தொடங்கும்.
நேற்றே அனைத்து பணிகளும் முடிவடைந்து அனைத்து கழக கண்மணிகளும் மாநாட்டு திடலை வந்தடைந்தவண்ணமுள்ளனர்.
தலைவர் வைகோ அவர்கள் இரவு பகலாக வந்து பணிகளை கவனித்துகொண்டிருக்கின்றார். நிர்வாகிகள் கண்மணிகள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை செய்துள்ளனர்.
தமிழக அரசியலுக்கு வழிகாட்டியாக அமைய போகும் இந்த மாநாடு வெற்றி பெறும். தமிழகத்தில் மாற்றம் ஏற்ப்படும்.
மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அண்ணாவின் கொள்கைகளை காக்கும் கண்மணிகளுக்கும் ஓமன் இணையதள அணி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment