மறுமலர்ச்சி தி மு க பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சென்ற 15 ஆம் தேதி நடந்த அறிஞர் அண்ணாவின் மிகப் பிரமாண்டமான பிறந்த நாள் மாநில மாநாட்டில் கோரிக்கையோடு எச்சரிக்கையும் மற்றும் கடந்த (19.07.2017) ஆம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் உள்ள ஐநா மனித உரிமை கவுன்சலின் முன்பு திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கையையும் முன் வைத்தார்.
இந்நிலையில், தோழர்கள் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, தோழர்கள் இன்று மாலை (20-09-17) புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஜெனிவாவில் ஐ. நா மனித உரிமை கவுன்சிலில் தமிழீழ பிரச்சினை குறித்து விவாதத்தில் கலந்து கொண்டு இருப்பதால், கழக துணைப் பொதுச்செயலாளர் மல்லை. சி.இ. சத்யா அவர்களின் தலைமையில் தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சைதை ப.சுப்பிரமணி, மாநில இளைஞரணி துணை செயலாளர் சிக்கந்தர், மாதவரம் பகுதி செயலாளர் ஏ.வி.ராஜன் உள்ளிட்ட கழகத் தோழர்கள், தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்களை வரவேற்றனர்.
No comments:
Post a Comment