இந்திய தேசத்தின் மூத்த வழக்கறிஞர் திரு. ராம்ஜெத் மலானியின் 94 வது பிறந்த நாள் நாளை 14-09-2017 வருகிறது.
இதையொட்டி வைகோ இன்று 13-09-2017 மாலை 3 மணி அளவில் மும்பை சென்று ராம்ஜெத்மலானியை அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி, ஏலக்காய் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது வைகோவிடம் பேசிய ராம்ஜெத்மலானி இந்தியா முழுதும் பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்க வேண்டும் என்று கூறினார்.
அதற்கு பதிலளித்து பேசிய வைகோ நிச்சயமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும், விரைவில் சென்னையில் மாநாடு நடத்துவதாகவும் தெரிவித்தார்.
மாலை 6மணி அளவில் மராட்டிய மற்றும் தமிழக ஆளுநராக பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் அவா்களுடன் சுமாா் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினாா்கள்.
இரவு 10 மணிக்கு தலைவர் வைகோ அவா்கள் மும்பை விமான நிலையம் சென்று தமிழகம் சென்றார்.
உடன் மும்பை மதிமுக நிர்வாகிகள் தமிழழகன், சுப்பிரமணியன், சிவன்ராஜ் மற்றும் மாரியப்பன் ஆகியோர் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment