செப்டம்பர் 27 நண்பகல் 11 மணிக்கு
27-09-2017 சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு மதிமுக துணைப் பொதுச்செயலாளர்
மல்லை சத்யா அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஐநா சபையில், மதிமுக பொதுச் செயலாளர்
வைகோ அவர்கள் மீது தாக்குதல் முயற்ச்சியை மேற்க்கொண்டதையடுத்து, சிங்கள இலங்கையை கண்டித்து நடந்த இந்த
ஆர்ப்பாட்டத்தில், இலங்கை கொடியை
எரித்தும், கிழித்தும், மைதிரி பால சிரிசேனா படத்தை
செருப்பால் உதைத்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதில் மதிமுக மகளிரணி நிர்வாகிகள்
ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட
முயன்ற போது காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
மதிமுகவினர் எப்போதெல்லாம் போராட்டத்தில்
கைது செய்யப்படுகிறார்களோ, அப்போதெல்லாம், அது பயிற்ச்சி பாசறையாக
உருப்பெறும். அந்த வகையில் இன்றும் மல்லை சத்யா, டி ஆர் ஆர் செங்குட்டுவன், வந்தயதேவன், மணி வேந்தன்
ஆகியோரும், ஏராளமான மதிமுகவினரும் கைது செய்யப்பட்டதால் பாசறை வலுபெற்று காணப்பட்டது.
மாலையில் அனைவரும் வருகையை பதிவு செய்த
பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment