ஐநா மனித உரிமை ஆணையத்தில் 36 ஆம் அமர்வில், 28-09-2017 அன்று பேசிய வைகோ அவர்கள், 2011 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியா இலங்கையைத் தோற்கடித்ததால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படை, தங்கச்சி மடம் மீனவர்கள் விக்டஸ், அந்தோணிராஜ், மேலும் இருவரை பற்களை உடைத்து, காலை வெட்டி, ஒருவரது தலையையும் துண்டாக்கி நான்கு பேரையும் கொன்று கடலில் வீசிய கொடுமை செய்ததை விவரித்தார்.
மகிந்த ராஜபக்சே, மைத்ரிபால சிறிசேனா இருவரையும் உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை ஒரு உலக மன்றத்தில் முதன்முதலாகத்தலைவர் வைகோ அவர்கள்தான் வைத்துள்ளார். இதற்கு முன்பு யாரும் இந்தக் கோரிக்கையை இங்கே முன்வைக்கவில்லை.
ஈழத்தமிழர் இனப்படுகொலை என்று சொல்வதற்கே அஞ்சி போர்க்குற்றம் என்றே பேசி வந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாக போர்க்குற்றம் என்று சொல்வதையும் நிறுத்திக்கொண்டார்கள்.
அதேபோல, ஐ-நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் ஈழத்தமிழர் தாயகத்திற்கு நேரில் வந்து பார்க்க வேண்டும். பொது வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துத் தலைவர் தனது உரையை நிறைவு செய்தார்.
குவைத் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், அந்நாட்டின் சிறந்த சொற்பொழிவாளர், முன்னணித் தலைவர்களுள் ஒருவருமான அப்துல் ஹமீது தஸ்தி
சிரிய அரசை ஆதரிப்பதால், நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார். இவர் மனித உரிமைப் போராளி.
ஐநா கவுன்சிலில் தலைவர் வைகோ அவர்களை தேடி வந்து சந்தித்தார். ஈழப்பிரச்சினை குறித்து நீண்ட நேரம் பேசினார். தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தகவல்: அருணகிரி
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment