ஜெனீவாவில் பொதுவாக்கெடுப்பு கோரிய வைகோவுக்கு நெல்லை வழக்கறிஞர்கள் பாரட்டு!
மனித உரிமைகள் ஆணையம் ஜெனிவாவில் 36 ஆம் அமர்வில், தமிழீழத்தில் நடந்தது இனக்கொலை. செய்தது சிங்கல ராணுவம். தமிழினம் உயிர் வாழ ஒரே வழி பொதுவாக்கெடுப்புதான் என பிரஸல்சில் முழங்கியதை ஐநா சபையிலே ஓங்கி குரல் எழுப்பி வந்திருக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்.
இந்நிலையில், சென்னையிலிருந்து மதுரை வந்த அவருக்கு சிறப்பான வரவேற்ப்பு நேற்று 10-10-2017 வழங்கப்பட்டது.
பின்னர் நெல்லை சென்ற வைகோ, நெல்லை வழக்கறிஞர் சங்கம் சார்பாக, தமிழீழத்திற்கு பிரஸ்சல்ஸில் கண்ட பொதுவாக்கெடுப்பு தீர்வுக்கு, முன்னுரிமை கொடுத்து ஜெனிவாவில் தீர்மானம் வடித்து, ஐ. நா. மனித உரிமைக் குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்ததற்காக, நெல்லை வழக்கறிஞர்கள் சார்பில் பாராட்டு விழா மாலை 4 மணி அளவில் தொடங்கி நடந்தது.
அடில் பங்கேற்ற வைகோ அவர்கள், நமது அடையாளங்கள் அழிந்து போய்விடக் கூடாது என்பதில் நம் கவனமாக இருப்போம் என் உரையற்றினார்.
No comments:
Post a Comment