மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் கலிங்கப்பட்டி இல்லத்தின் காவல் அரணாக விளங்கிய ஜெயபிரகாஷ் அவர்கள் நேற்று 21-10-2017 இயற்கை எய்தினார். இதையறிந்த வைகோ அவர்கள் உடனடியாக கலிங்கப்பட்டி வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வைகோ அவர்களை காண செல்லும் அனைவருக்கும் கலிங்கப்பட்டி இல்லத்தில் உணவுப் பரிமாரி நமது பசியைப் போக்கிய பெரியவர் ஜெயப்பிகாஷ் அவர்கள்.
அவரின் இறுதி சடங்கு இன்று 22-10-2017 கலிங்கப்பட்டியில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டார். உடன் மதிமுக மாவட்ட செயலாளர்கள், மற்ற நிர்வாகிகள், ஊர்மக்கள் என ஏராளமானோர் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டார்கள்.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்
No comments:
Post a Comment