நூல் விழி காணும் விழா, விஜிபி சந்தோசம் அவர்கள் நூல் வெளியீட்டு விழா, சென்னை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் இன்று 06.10.2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் நடந்தது.
அதில் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. பேசுவதற்கு முன்னர், வரும் 9ஆம் தேதி நடக்க இருக்கும் வேலு நாச்சியார் பட விழாவிற்கான அழைப்பிதழை தலைவர் வைகோ மேடையில் வீற்றிருந்தவர்கள் அனைவருக்கும் வழங்கினார்கள்.
இதில் உரை நிகழ்த்திய தமிழக அரசியல் ஆசிரியர் திரு. சுந்தர் ராமன் அவர்கள், தமிழகத்திற்கு கொடுப்பினை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். வைகோ அவர்கள் ஒரு போராளியாகவே அடையாளம் காட்டி கொள்வதில் பெருமைபடுபவர், எனக்கு பிடித்த அரசியல்வாதி வைகோ என புகழாரம் காட்டினார்.
நல்லி குப்புசாமி செட்டியார் பேசும்போது, நம்மாளால ஒருத்தருக்கு சங்கடம் வரக்கூடாது என்று நினைப்பவர் வைகோ. அவரது தமிழுக்கும் பேச்சுக்கும் நான் அடிமை என பேசினார்.
மலேசிய எம்.ஜி.ஆர் மண்டல தலைவர் திரு.மணி வாசகம் அவர்கள் பேசும்போது, ஐயா வைகோ அவர்களை மலேசிய மக்களுக்கு அதிகம் பிடித்து போய் விடுகிறது. அதனால்தான் மலேசிய அரசும் பிடித்து வைத்தது போலும் என பேசினார்.
நூல் ஆசிரியர் இன்பா பேசும்போது, தமிழன் எங்கு எல்லாம் துன்ப்படுகிறானோ அங்கெல்லாம் முதல் குரல் கொடுப்பவர் வைகோ. நடிகர் திலகத்திற்கு தபால்தலை வெளியிட்டு ஒரு மணி நேரம் இருபது நிமிடம் சிவாஜி ரசிகன் கூட பேச இயலாத அளவிற்கு உரையாற்றினார் ஐயா வைகோ.
தமிழகமே எதிர்பார்க்கும் ஐயா வைகோ அவர்களுக்கு முன்பு பேசுவதில் பெருமை அடைகிறேன் என நடிகை கஸ்தூரி பேசினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment