மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேற்று 02-10-2017 அன்று தனது நீண்ட நாள் நண்பரும், தமிழக பொறுப்பு ஆளுநருமான வித்யாசாகர் ராவ் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மராட்டிய மாநிலம் செல்வதால், நட்பு ரீதியாக நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
வித்யாசாகர் ராவ் நடுநிலை தவறாமல் நேர்மையாக பணியாற்றினார். ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் மற்றும் ஔவையார் சிலைகளை நிறுவிய பெருமைக்குரியவர்.
பொதுமக்கள் ஆளுநர் மாளிகையை கண்டு களிப்பதற்கு அனுமதித்ததற்கான சிறப்பும் அவருக்கு உண்டு என்று வைகோ கூறினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment