கோவில்பட்டியில் விவசாயப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மதிமுக ஆர்ப்பாட்டம்!
மானாவாரி விவசாயப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு நிவாரணத் தொகை வழங்கிட வலியுறுத்தி மதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று 31-10-2017 நடந்தது.
இதில் காப்பீடு கேட்டு வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது மக்களிடம் நிவாரணம் கிடைத்ததா என செய்தியாளர்களுக்கு முன்பாக கேட்டார். அதற்கு மக்கள் நிவாரணம் கிடைக்கவில்லை என்றார்கள் ஒரே குரலாக. இந்த சத்தமாவது பிரதமர் காதுக்கு எட்ட வேண்டும் என முழங்கினார் வைகோ.
இதில் தென் மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.
வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்
No comments:
Post a Comment