Monday, March 23, 2015

யார் அந்த ஜெய பிரசாந்த்! வைகோவையே சுற்றி வந்தது ஏன்!

புரட்சி புயல், மக்கள் தலைவர், தாய் மண்ணை காக்க ஓய்வில்லாமல் தன்னுடல் வருத்தி போராடும் பெரு வானம், பிரதம மந்திரிகளை தன் கூரிய நாவின் மூலம் கேள்விக்கணைகளை தொடுத்து திணறடித்த வீர மகன், கலிங்கப்பட்டியின் செல்வ மகன், எங்கள் தலைவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் செல்லுமிடமெல்லாம் கருமை நிறத்தோற்றத்தில் 23 வயது துடிப்புமிக்க இளைஞன், மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்படுவதை காண முடியும். அந்த இளைஞனுக்கு இன்று பிறந்த நாள். ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதோடு, நூறாண்டு வாழ இறைவனை வேண்டுகிறோம்

யார் இந்த இளைஞன்? அவர் ஏன் வைகோ போகுமிடமெல்லாம் அவரையே சுற்றி சுற்றி வருகிறார்?

2011 ஆம் ஆண்டு பரமக்குடியில் நடந்த அந்த கொடுமையான கலவரம் மதுரை வரை சங்கமமாயிருந்தது. அந்த நேரத்தில் வைகோ மதுரை சிந்தாமணி பகுதியில் பயணித்து கொன்டிருந்த போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஒரு இளைஞன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டார். பதறிப்போனார் வைகோ. காவல்துறையின் சில கண்மூடிதனமான போலீஸ்காரர் சுட்டதில் புஜத்திலும், மார்பிலும் குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த இளைஞனை, தலைவர் தாமே மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மிகப்பெரிய மரணப்போராட்டத்திற்கு பிறகு உயிர் பிளைத்தான் அந்த இளைஞன்.

அதற்கு பின்னர், தலைவர் வைகோ எங்கு சென்றாலும் அவரை பிந்தொடர்ந்தான் அந்த இளைஞன். "என்னை சுற்றி சுற்றி வராதே" என கண்டித்தார். உயிர் கொடுத்தவரையே பற்றி கண பொழுதும் நினைத்துக்கொண்டிருந்ததால், கண்டித்தது கூட அந்த இளைஞன் காதுகளுக்கு விழவில்லை. உனக்கு எங்காவது நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்னை சுற்றி வராதே என்றும் தலைவர் சொல்லி பார்த்தார். வேலை எங்கு சென்றாலும் கிடைக்கும், இப்படி ஒரு தலைவன் கிடைப்பாரா என எண்ணினான் அந்த இளைஞன். உயிர் கொடுத்த கடவுளையே கண்ட பிறகு, வேலை எதற்கு என அதையும் நிராகரித்தான் பிடிவாதமாக. உயிர் பிச்சை கொடுத்த உங்களுடன் தான் இனி என் வாழ்க்கை அற்பணிப்பு என சாதாரணமாக வைகோவிடத்தில் சொல்லிவிட்டான் அந்த இளைஞன். என்ன சொன்னாலும் கேட்பதாக இல்லை. பின் தொடர்ந்தான் செல்லுமிடமெல்லாம்...

நாட்கள் ஓடின, ஆண்டுகள் கடந்தன.... வைகோவை பின்தொடர்தலும் தொடர்ந்தது. ஈழத்திலே தமிழர்களை கொன்றுகுவித்த கொலைக்காரன் கொடியவன் ராஜபக்சே சாஞ்சிக்கு வருகிறான், அவனை எதிர்த்து போராடுகின்ற போர்களத்திலேயும் போர் வீரனாய் அந்த இளைஞனை அங்காயும் கண்டார் வைகோ... அந்த உண்ணாவிரத போராட்டத்திலே அதிசயம் நடந்தேறியது, சுற்றி சுற்றி வராதே என்று கண்டித்தும் தன்னையே சுற்றி சுற்றி வந்ததால், அவனின் கடமையுணர்வை கண்டவர், இனி இந்த இளைஞன் என்னுடைய உதவியாளனாக இருப்பான் என அறிவித்தார். யார் அந்த இளைஞன்? அந்த இளைஞன் தான்...

"ஜெய பிரசாந்த்"

மதுரையின் ஒரு சிறு கிராமத்தில் தானி ஓட்டும் தகப்பனார், வீட்டை மெருகேற்றிகொண்டிருக்கும் தாயாருக்கு மகனாய் பிறந்தார். தனக்கென ஒரு சகோதரியையும் கொண்டுள்ள இவர், கடைக்குட்டியாக பிறந்த செல்ல பிள்ளை ஆவார். இவர் மூன்றாண்டு தொழிற்கல்வி படிப்பை மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறையில் வெற்றிகரமாக முடித்திருந்தார். பின்னர் அலைப்பேசி வலையமைப்பு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில் தான் பரமகுடி சம்பவம் நடந்தேறியது. உதவியாளர் ஆன பின்னர் தலைவரின் நிழலாகவே இருக்கிறார் அருமைத்தம்பி பிரசாந்த். நான் அழைக்கும் போதெல்லாம் வாய் நிறைந்த வார்த்தையோடே சொல்லுங்கண்ணே, எப்படி இருக்கீங்க என்று அன்பை பொழியும் குணம். வைகோவின் பாசறையில் வார்க்கபட்டுகொண்டிருக்கும் வருங்கால பட்டயம். விழி மூட நேரமில்லாமல் அசதியால் சோர்வடையும் தலைவன் ஆரோக்கியமாயிருக்க மருந்து குறிப்புகளையும் தாங்கி நடக்கும் சுமைதங்கி, போராட்டக்களத்தில் பல முறை கைது செய்யப்பட்டு மண்டப சிறைச்சாலைகளை மாணிக்க கோபுரங்களாக எண்ணி குதூகலித்ததுண்டு. தலைவரின் இன்ப துன்பங்களின் உதவியாளர். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால்,

வைகோ என்ற சீறும் புலியின், கருமையான நிழலுருவம்தான்...
"கரும்புலி ஜெய பிரசாந்த்"

உயிர்கொடுத்த தலைவனை நெஞ்சிலே மாலையாக சுமக்கிறார். அப்படிப்பட்ட அருமைத்தம்பி பல்வேறு நற்பணிகளை வைகோவுடன் சேர்ந்தே அரங்கேற்றுகிறார். அவர் வாழ்நாளில் பெற்ற பாக்கியம் இப்படிபட்ட தலைவனுக்கு உதவியாளனானதுதான் என்ற பெருமை அவருக்கு எப்போதும் உண்டு.

கழகப்பணிகள் சிறப்பாக நடக்கட்டும், கரிகாலன் பிரபாகரன் கைகாட்டிய தலைவன் வைகோ அரியணையில் ஏறும் காலம் நெருங்கிவிட்டது. காத்திரு தம்பி பம்பரமாய் சுழலுவதற்கு....

மறுமலர்ச்சி மைக்கேல்.
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment