Sunday, March 1, 2015

மதிமுக இணையதள அணி - ஓமன்

அன்பார்ந்த தமிழ் சொந்தங்களே!!! 

திராவிட இயக்கத்தின் தன்னிகரில்லா தலைவர் திரு வைகோ அவர்கள் தலைமையில் பொதுநலத்தோடு தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க அயராது நொடிபொழுதும் எந்த பிரதிபலனுமில்லாமல் பாடுபடும் ஒரே இயக்கம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம். தமிழக மக்கள் அகிலமெங்கும் பரவி வாழ்கின்றனர். அவர்களை நம் இயக்கத்தின் மூலமாக ஒருங்கிணைப்பதோடு, தமிழக அரசியல் சூழ்நிலையை பற்றி அறிந்துகொள்ளவும், கருத்துக்களை பரிமாறவும், மதிமுக-வின் நற்பணிகளை அனைவருக்கும் பகிரவும், ஓமன் நாட்டிலே வாழும், திராவிட சொந்தங்களை இணைத்து மக்கள் நலன் சார்ந்த இணையதள போராட்டங்களை முன்னெடுக்கவுமே, இந்த இணையதளம் தொடங்கப்பட்டு செயல்பட்டுகொண்டிருக்கிறது.

எனவே! அனைத்து தமிழக மக்களும், மதிமுக தொண்டர்களும் இயக்கத்தின் கொள்கைகளையும், அன்றாடம் நமது தலைவர் திரு.வைகோ அவர்கள் மக்களுக்கு ஆற்றும் பணிகளை இணையத்தின் மூலமாக கடை கோடி மக்களுக்கும் எடுத்து செல்லுவோம். நமது பயணம், தமிழகத்தை காக்க தலைவர் வைகோ அவர்களை முதலமைச்சர் ஆசனத்தில் உக்காரவைப்பதாக இருக்கவேண்டும். 2016 மறுமலர்ச்சி ஆண்டாக மலர வைப்போம், இந்த பக்கத்தை https://www.facebook.com/mdmkoman (Click)அழுத்தி, (Open)திறந்து, (Share)பகிர்ந்து, (Invite)அழைப்பு கொடுங்கள். உங்கள் நண்பர்களிடத்தும், அவர்களுடைய நண்பர்களுக்கு அழைப்பு கொடுக்குமாறு வலியுறுத்துங்கள். அதன் மூலம், அவர்கள் நமது இயக்கத்தின் புதுப்பித்த பதிவுகளை தெரிந்துகொள்வதால், நமது இயக்கத்தையும், அதன் தினசரி செயல்பாடுகளையும் அனைவருக்கும் கொண்டு சேர்க்க பேருதவியாக இருக்கும்.  அதன் மூலம் தலைவர் வைகோ-வின் கரத்தை வலுப்படுத்த முடியும்... முன்னேறி செல்வோம். அதிகாரத்தை கைப்பற்றுவோம்...

செய்வீர்களா!!! நீங்கள் செய்வீர்களா!!!


மதிமுக இணையதள அணி - ஓமன்
https://www.facebook.com/mdmkoman/
http://mdmkoman.blogspot.com/

தொடர்புக்கு: 
மறுமலர்ச்சி மைக்கேல், 
அலைபேசி இலக்கம்: +968-95484987

No comments:

Post a Comment