Friday, March 6, 2015

மதிமுக நடத்தும் சுதந்திர போராளி வேலுநாச்சியார் நாடகம்!


இராமநாதபுரம் சேதுச்சீமையில் இளவரசியாக பிறந்து, சிவகங்கை சீமையை ஆண்ட, வெள்ளையர்களை வெற்றி கொண்ட வீரமங்கை வேலுநாச்சியார் நாடகத்தை ஐ.நா. சபை வரை நடத்துவதேன்?..

வேலுநாச்சியார் வரலாற்றில் வரும் முக்கியமானவர்கள்...


வேலுநாச்சியார் -மறவர்
மருது சகோதரர்கள்-அகமுடையார்
குயிலி -அருந்ததியர்
ஹைதர் அலி- இஸ்லாமியர்
கோபால்சாமி-நாயக்கர்

இப்படி சாதி, மதம் வேறுபாடின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டுக்காக போராடினர்.
சமுதாய நல்லிணக்கத்திற்கும் ஒற்றுமைக்கும் வேலுநாச்சியார் வரலாறு ஒரு எடுத்துக்காட்டு..
பெண்ணுக்கு அரசு உரிமை இல்லை என்பதால் மட்டுமே, வெள்ளையர்களை எதிர்த்து போராடிய ஜான்சிராணியை கொண்டாடும் இந்திய வரலாறு, நாட்டின் சுதந்திரத்திற்கு போராடி வெற்றி பெற்ற வேலுநாச்சியாரின் வரலாறை மறைக்கிறது..
வரலாறை வெளிக்கொணரவே மதிமுக தன் சொந்த செலவில் இந்நாட்டிய நாடகத்தை தமிழகம் முழுவதும் நடத்துகிறது..
திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தவரின் புதல்வர் Sriram Sharma அவர்கள் இந்நாடகத்தை இயக்கியது கூடுதல் சிறப்பு..
நாளை(07.03.2015) மாலை இராமநாதபுரம் M.G.மஹாலில். மக்கள் தலைவர் வைகோ‬ தலைமையில் நாட்டிய நாடகம் நடை பெறுகிறது.. அனைவரும் வருகை தந்து வரலாறை தெரிந்துகொள்ள வேண்டுகிறோம்...

சாதி,மதத்திற்கு அப்பாற்பட்ட தமிழர்களின் போர் குணத்தை தெரிந்து கொள்வோம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment