Saturday, April 25, 2015

திருநங்கைகளுக்கு சம உரிமை, திருச்சி சிவா-க்கு மதிமுக வாழ்த்து!

ஆண் மற்றும் பெண்களைப் போலவே, திருநங்கைகளுக்கும், சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்பது போன்ற அம்சங்களை கொண்ட சட்ட மசோதாவை திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கடந்த மார்ச் மாதம் ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். அந்த தனி நபர் மசோதா மீதான விவாதம் முடிந்து ராஜ்யசபாவில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

திருநங்கைகள் உரிமை சட்டம் 2014' என்ற பெயரிலான இந்த சட்டம் இனிமேல் மக்களவைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கும் மசோதா நிறைவேறினால், குடியரசு தலைவர் ஒப்புதலுடன் இச்சட்டம் அமலுக்கு வரும். ராஜ்யசபா வரலாற்றிலேயே 46 வருடங்களுக்கு பிறகு தனி நபர் (அரசு சார்பில் அல்லாத) மசோதா ஒன்று நிறைவேறியுள்ளது இதுதான் முதல் முறை. இந்த பெருமையை தமிழகத்தை சேர்ந்த எம்.பியான திருச்சி சிவா பெற்றுள்ளார்.

தன்னலம் பாராமல் பொது நலத்திற்காக போராடும் திருச்சி சிவா அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதோடு தங்கள் பொதுப்பணியால் பொதுமக்கள் மெலும் பயன் பெற கூடுதலான  உற்சாகத்தில் உழைக்குமாறும் கேட்டுகொள்கிறோம். 


மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment