Friday, April 17, 2015

மார்த்தாண்டத்தில் ஆந்திராவை எதிர்த்து மதிமுக கண்டன ஊர்வலம்!

ஆந்திராவின் சித்தூர் அருகே உள்ள காட்டில் செம்மரங்களை கடத்தினார்கள் என 20 தமிழக கூலித்தொழிலாளர்களை ஆந்திர காவல் துறை பிடித்து வைத்து சித்திரவதை செய்து சுட்டுக்கொன்றது. இதற்கு எந்த வருத்தமும் ஆந்திர அரசும் தெரிவிக்கவில்லை, அதற்கு மாறாக ஆந்திர அமைச்சர் கூலித்தொழிலாளர்கள் இன்னும் வந்தால் சுடுவோம் என கூறியுள்ளார். இது தமிழக மற்றும் ஆந்திர தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த படுகொலையை கண்டித்தும், CBI விசாரணை கோரியும், மத்திய அரசை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மறுமலர்ச்சி திமு கழகம் சார்பில் அனைத்து மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து மார்த்தண்டம் வெட்டுமணி சந்திப்பிலிருந்து பம்மம் ஆந்திரா வங்கி வரை ஊர்வலமாக சென்று முற்றுகையிட்டு கண்டனத்தை தெரிவித்தனர். 

கண்டன ஊர்வலத்தை குமரி மாவட்ட மதிமுக செயலாளர் தில்லை செல்வம் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் மதிமுக மாணவரணி, இளைஞரணி, மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் மணவரணியின் மையப்புள்ளி தம்பி ஜெபர்சன் அவர்களும், சகோதரர் சாஜி அவர்களும் ஊர்வலத்தில் கோசங்களை சொல்லியவாறு சென்றனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment