Friday, April 10, 2015

முற்றுகையில் கைது செய்யப்பட்ட வைகோ மாலையில் விடுதலை!

தமிழக கூலித்தொழிலாளர்கள் 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர காவல்துறையை கண்டித்து நடத்திய முற்றுகை போராட்டத்தில் தலைவர் வைகோ கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதனிடையே தலைவர் வைகோ தொண்டர்களிடம் பேசினார். தொண்டர்களை பார்த்து கழகத்தை காப்பாற்றிய காவல் தெய்வங்கள் நீங்கள்தான்.நெஞ்சிலிருந்து சொல்கிறேன்.நான் நலமாக இருக்கிறேன் என்றும், கடும் வெயிலில் போராடி குளிர்ச்சியான இடத்திற்கு இப்போது வந்ததை போலவே நமக்கும் நல்ல எதிர்காலம் வரும் எனவும் தலைவர் வைகோ தொண்டர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார். 

பின்னர் தொண்டர்கள் தங்கள் விருப்பப்படி தானைத் தலைவன் வைகோவுடன் சேர்ந்து தங்கள் விருப்பமான புகைப்படங்களை எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.

மற்ற தலைவர்களை சந்திக்க கோபாலபுரத்திலும், போயஸ் கார்டனிலும் காத்திருக்கும் சூழலில் நம் தலைவர் வைகோ அவர்களை சந்திக்க போராட்ட களத்திற்கு வந்தால் போதுமானதே!

இந்த கைது பதிவு செய்யும் விதமாக காவல்துறை பதிவேட்டில் கைதை பதிவு செய்தார் மக்கள் தலைவர் மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள். பின்னர் தொண்டர்களோடு தலைவர் வைகோவும் விடுதலையானார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment