Monday, September 12, 2016

பரம்பிகுளம் அணைப்பகுதியில் தமிழ் மக்கள், பொதுப்பணியினர் மீது கேரள வனத்துறை தாக்குதலுக்கு வைகோ கண்டனம்!

கேரள பகுதியில் அமைந்துள்ள பரம்பிகுளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகளை பி.ஏ.பி. திட்ட ஒப்பந்தத்தின்படி தமிழக அரசு பராமரித்து வருகிறது. கேரள மாநிலப் பகுதியில் இந்த அணைகள் இருப்பதால், அங்குள்ள கேரள வனத்துறை சோதனைச் சாவடிகளைக் கடந்துதான் இந்த அணைகளுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் செல்ல வேண்டியுள்ளது. கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி, தமிழக அரசின் பொதுப்பணித்துறையைச் சேர்ந்த 12 பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் பரம்பிகுளம் அணையில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்திட அரசு வாகனத்தில் பரம்பிகுளம் கேரள சோதனைச் சாவடி கடந்து அணைக்குச் சென்று கொண்டிருந்தபோது, கேரள வனத்துறையினர் வாகனத்தை வழி மறித்து, கேரள வனத்துறையினரின் அனுமதி வந்த பிறகுதான் அனுப்ப முடியும் என்று கூறி உள்ளனர்.

கேரள வனத்துறை அதிகாரிகளிடம் பேசிய தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முறையான பதில் கிடைக்காததால் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கhத்திருந்துவிட்டு திரும்பிவிட்டனர்.

பரம்பிகுளம் அணைப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஐந்து ஆண்டுகளாக பரம்பிகுளம் பகுதி குழந்தைகள் ஆனைமலை வரை பள்ளிப் படிப்புக்காக வந்து செல்ல பொதுப்பணித்துறை சார்பில் பள்ளிப் பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது.

பரம்பிகுளம் அணை கட்டும் போது, சென்ற தமிழர்களின் குழந்தைகள் தினந்தோறும் கhலையில் பரம்பிகுளத்திலிருந்து ஆனைமலை பள்ளிக்கு வந்துவிட்டு, மாலை அதே பேருந்தில் திரும்பி விடுவர். இந்நிலையில், இன்று கhலையில் தமிழகப் பொதுப்பணித்துறை சார்பில், இயக்கப்பட்டு வந்த பள்ளிப் பேருந்துக்கு அனுமதி வழங்க முடியாது என்று கேரள பரம்பிகுளம் மாவட்ட வன அலுவலர் ரஜ்ஜசன்குமார் தெரிவித்துள்ளார். இதனால் இன்று கhலாண்டுத் தேர்வு எழுதச் சென்ற 22 குழந்தைகளும் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதால், வழக்கம் போல பள்ளி பேருந்தை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி குழந்தைகளின் பெற்றோரும், பொதுமக்களும் பரம்பிகுளம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள வனத்துறை அலுவலர்கள் பள்ளி வாகனத்தை அனுதிக்க முடியாது என்று மறுப்புத் தெரிவித்ததுடன், மறியல் அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி உள்ளனர். இந்த முறைகேடான நடவடிக்கையைத் தட்டிக்கேட்ட தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளான கருணாகரன், தியாகராஜன், குமார் ஆகியோரை கேரள வனத்துறையினர் தாக்கி உள்ளனர்.

இத்தகைய மிருத்தனமான தாக்குதலை ஏவி விட்ட கேரள வனத்துறை மாவட்ட அலுவலர் ரஜ்சன்குமார், கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், பரம்பிகுளத்தில் தமிழ் மக்கள் மீதும், பொதுப்பணித்துறை ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்திய கேரள வனத்துறையினருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

பரம்பிகுளத்தில் தேவையில்லாமல் பதற்றத்தை உருவாக்கி, கhவல்துறையினர் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட கேரள வனத்துறை மாவட்ட அலுவலர் ரஜ்ஜன்குமாரை பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு இதில் அலட்சியம் கhட்டாமல் மேல் நடவடிக்கை எடுத்து, கேரள வனத்துறை அதிகாரி ரஜ்ஜன்குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசை வலியுறுத்துவதுடன், தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரம்பிகுளம் அணையின் பராமரிப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment