Monday, September 26, 2016

மக்கள் நலக் கூட்டியக்கம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும்-வைகோ!

உள்ளாட்சி தேர்தல் குறித்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் இன்று 26-06-2016 மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது. கலந்துரையாடலில் மக்கள் நலக் கூட்டியக்கம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் என முடிவெடுக்கப்பட்டு, வெற்றிக்கு இணைந்து பாடுபடவேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், தேர்தல் அறிவிப்பிற்கு மறுநாளே ஆளும்கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளி வருவது கேள்விக்குரியது.

காவிரி பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது. சட்டசபை கூட்டி தண்ணீர் விடக்கூடாது என தீர்மானமும் கர்நாடகத்தில் நிறைவேற்றி இருப்பது இந்திய இறையாண்மை க்கு விடுக்கப்பட்ட சவால். இதை பிரதமர் மோடி கண்டிக்காத்தையும் தவறாக நினைக்கிறோம். மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது என்றும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

கோவையில் நடந்த படுகொலையை கண்டிக்கும் அதே வேளையில் மறுநாள் நடந்த வன்முறையினை கண்டிப்பதோடு, சேதமடைந்தவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும். 

உள்ளாட்சி தேர்தலில் உள்ளூர் பிரச்னையை மனதில் கொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டுகிறேன்  எனவும் மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்தார். 

இந்த நிகழ்வில், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் மற்றும் கூட்டணி இரத தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment