Saturday, September 17, 2016

காவிரி உரிமையை நிலைநாட்ட மாணவர்கள் மதிமுக தாயகத்தில் உண்ணாவிரதம்!

காவிரி உரிமையை நிலைநாட்ட மாணவர்கள் இன்று 17.09.2016 முதல் மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகம் தாயகத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர். அவர்களை மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மண்ற மாநில செயலாளர் பால்.சசிகுமார் வாழ்த்தி பேசினார்கள்.

உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களின் கோரிக்கைகள்:-
1.காவிரி பிரச்சனையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட உச்சநீதி மன்றத் தீர்ப்பைப் பின்பற்றி காவிரி மேலாண்மை வாரியமும்,காவிரி ஒழுங்குமுறை குழுவும் அமைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை மதித்து தமிழகத்திற்கு கர்நாடகம் தரவேண்டிய 192டி.எம்.சி அளவு தண்ணீரை முழுமையாக எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி உடனடியாக வழங்க வேண்டும்.

3.காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு கட்டியுள்ள அணைகளான கிருஷ்ணசாகர்,கபினி,ஹேரங்கி,ஹேமாவதி,ஸ்வர்ணவதி ஆகிய அணைகளின் மீதான ஆளுகை உரிமையை மாநில அரசிடம் இருந்து மேலாண்மை வாரியத்திற்கு உடனடியாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.கர்நாடகத்தில் வெடித்துள்ள வன்முறை சம்பவங்களால் தமிழகத்திற்கு சொந்தமான 65-க்கும் மேற்பட்ட பேருந்துகள்,40-க்கும் மேற்பட்ட லாரிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.தமிழகப் பதிவு எண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.பெங்களூரில் உள்ள தமிழர்களின் ஜவுளி நிறுவனங்கள்,உணவகங்கள்,தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.இதனால் ஏற்பட்டுள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான இழப்புகளை ஈடு செய்ய கர்நாடக அரசு உரியவர்களுக்கு நஷ்ட ஈடாக முழுத்தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்.

5.கர்நாடக தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்கள் கனட இன வெறியர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளனர்.இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும்,பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் கர்நாடக அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

6.கர்நாடக மாநிலத்தில் வாழ்கிற தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை கர்நாடக அரசே முழுமையாக வழங்கிட மத்திய அரசும்,தமிழக அரசும் உடனடியாக வலியுறுத்த வேண்டும்.

7.மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

மாணவர் போராட்டம் வெல்லட்டும். தமிழக உரிமைகள் மீள கிடைக்கட்டும்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment