Wednesday, September 21, 2016

நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாட்டில் மக்கள் நல கூட்டியக்க தலைவர்கள் உரை!

சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் இன்று (21.09.2016) மாலை நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் நடத்தப்பட்டது. இதில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டனர்.

நதிநீர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள தலைவர் வைகோ வருவதற்கு முன்னதாகவே மதிமுக துணைப் பொதுசெயலாளர் அண்ணன் திரு.மல்லை சத்யா வருகை தந்து தலைவர் வந்ததும், தலைவருடன் மாநாட்டினுள் சென்றார். 

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைவர் வைகோவை வரவேற்று பேசிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து வருகை தந்த குமரி அனந்தன் அவர்களுடன் தலைவர் வைகோ கலந்துரையாடினார். 

தொடர்ந்து மாநாடு தொடங்க தலைவர்கள் மாநாட்டு திடலில் நுழைந்து விண்முட்டும் கர ஒலியுடன் அமர்ந்தனர். மாநாட்டு தீர்மானத்தை மாநாட்டு தலைவர் தொல்.திருமாவளவன் முன்மொழிந்தார்.

தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன், மா.கம்யூனிஸ்டு தோழர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு தமிழ்நாடு செயலாளர் முத்தரசன் ஆகியோர் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் உரையாற்றினார்கள். 

குமரி அனந்தன் அவர்கள் தன் உரையை துவக்கும்போது, அணைகள் கட்டி நீர்நிலைகளை பாதுகாத்தவர் காமராஜர். அவர் பெயரில் அமைந்த இந்த அரங்கில் நதிநீர் மாநாடு நடப்பது பொருத்தமே. இதில் புரட்சிபுயல் வைகோ அவர்களும் பேச இருக்கிறார் என பேசினார்.

தலைவர் வைகோ அவர்கள் பேசும்போது, 66ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் நதி நீர் இணைப்பை குறித்து தனி நபர் மசோதா கொண்டு வந்து விவாதிக்கப்படவில்லை. அதை கொண்டுவந்து விவாதம் இடம் பெற செய்தவன் அடியேன் வைகோ.

குறைந்த பட்ச செயல் திட்டத்தில் தென்னக நதிகளையாவது இணைக்க வேண்டும் என்ற என் கோரிக்கையை மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஏற்றுக் கொண்டு அதில் சேர்த்தது.

அணை அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றால், நெய்வேலி சுரங்கம், ஆவடி தொழிற்சாலை எங்களுக்கே சொந்தம் என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்படும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்தார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment