Sunday, October 9, 2016

அக்டோபர் 10 மதிமுக சூளுரை நாளில் வைகோ தலைமையில் சூளுரைப்போம்!

தமிழின முதல்வர் வைகோ அவர்கள் மீது கருணாநிதியும், அவரது குடும்பமும் கொலை பழி சுமத்தி தி.மு.க. வைவிட்டு வெளியேற்றியதால், பேரறிஞர் அண்ணா அவர்களின் இலட்சியக் கனவுகளை நனவாக்க, தியாக நெருப்புக்கு தங்கள் உயிர்களைக் கொடையாக தந்த நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகியோரின் நினைவாக அக்டோபர் 10 ஆம் நாளை நாம் சூளுரை நாளாக கடைபிடிக்கிறோம்.

தியாகிகளின் தியாகத்திற்கு நினைவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நாளை 10.10.2016 திங்கட்கிழமை மாலை 3 மணி அளவில் மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில் நடைபெறுகிறது.



இதில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு உயிர்க்கொடை தந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார். வைகோ அவர்கள் தலைமையில் சூளுரை மேற்கொள்ள அனைவரும் தாயகத்திற்கு படையெடுத்து வருகை தந்து தியாகிகளின் தியாகத்தை நினைவு கூருமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment