உலக கோப்பை கபடி போட்டி இந்தியாவில் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய கபடி அணி தொடர்ந்து 3 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றி ஹாட்ரிக் அடித்து சாதனை படைத்துள்ளது. இதில் முன்னணி இந்திய வீரர் 14
புள்ளிகள் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு எடுத்துச் சென்றார்.
அரையிறுதி போட்டியில் தாய்லாந்துடன் விளையாடி அணி தாய்லாந்து அணியை அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்க்கடித்து, இறுதி சுற்றுக்கி தேர்வாகியிருந்த ஈரானுடன் மோத முடிவானது.
இன்று நடந்த போட்டியில் ஈரான் முதலில் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்தியா
38-29 என்ற புள்ளி கணக்கில் ஈரானை தோற்க்கடித்து வெற்றிக்கொடியை நிலைநாட்டியது.
தொடர்ந்து வெற்றிக்கொடியை நிலைநாட்ட அரும்பாடு பட்ட வீரர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு உறுதுணையாக இருந்து வீரர்களின் உடல் நலனிலும், ஊக்கமும் அளித்த பயிற்ச்சியாளருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெற்றி கோப்பையை கைப்பற்றிய கபடி வீரர்களுக்கு இந்திய நடுவண் அரசு அதிக பரிசு தொகையை அறிவித்து அவர்களது வாழ்வாதாரத்திற்காக மரியாதையான அரசு வேலையையும் வழங்கிட
ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வலியுறுத்துகிறேன்.
வீரர்களை உற்சாகப்படுத்தும் பட்சத்தில், வீரர்கள் இன்னும் வேகமாக தங்கள் திறமைகளை நிரூபிக்க, இப்படிபட்ட ஊக்க பரிசுகள் வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மறுமலர்ச்சி மைக்கேல்
ஓமன்
மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment