காவிரி நீர் உரிமைக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் இரண்டாவது நாளாக இன்று 18-10-2016 நடந்தது.
இந்த மறியலுக்கு பின்னர் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான வைகோ மற்றும் திருமாவளவன் தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டு புதுப்பேட்டை மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
பின்னர் அனைவரும் தங்கள் கருத்துக்களை எடுத்து பேசினார்கள். மதிய உணவிற்கு பின்னர் வைகோ சற்று நேரம் இளைப்பாறினார். தொண்டர்களும் இளைப்பாறினார்கள்.
தொடர்ந்து நிகழ்வுகள் பயிற்சி பாசறையாக மாறி கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் காவிரி மற்றும் உரிமை சம்பந்தமான பாடல்களை பாடி உற்சாகமூட்டினார்கள். மக்கள் அதிகாரம் அமைப்பும் பாட்டின் மூலம் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார்கள்.
மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர் அண்ணன் டி.ஆர்.ஆர் அவர்கள் பேசும்போது, ஓட்டு பொறுக்கவே பாஜக அரசு இருக்கிறது, நாட்டு மக்களுக்காக அல்ல என மத்திய அரசை வார்த்தை கணைகளை ஏவினார்.
நேற்றும் இன்றும் ரயில் மறிய கைதுக்கு பின் நடக்கும் நிகழ்வுகளை நேர்த்தியுடன் ஆவடி அந்தரிதாஸ் அவர்கள் தொகுத்து வழங்க கழக துணை பொதுச் செயலாளர் அண்ணன் மல்லை சத்யா அவர்கள் உரையாற்றினார்.
இ.கம்யூனிஸ்ட் திரி.வீரபாண்டியன் அவர்கள் பேசும்போது, போலீஸ் அதிகாரிக்கே கூட மூச்சிரைப்பை உருவாக்கிய போராட்டம்தான் இன்றைய போராட்டம். திரு.வைகோ அவர்கள் எப்போதும் ஜனநாயக முறைப்படி மதிப்பளித்து வாய்ப்பளிப்பவர். ஆகவேதான் நான் இங்கு நின்று பேசி கொண்டிருக்கிறேன் என உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசும்போது காவல்துறை விடுவித்து விட்டதால், அண்ணன் வைகோ பேசுவார் எனச் சொல்லி தன் பேச்சை சுருக்கி கொண்டார்.
கைதான தலைவர் வைகோ உள்ளிட்ட தோழர்கள் விடுதலை யான பின்பு தலைவர் வைகோ அவர்கள் உரை நிகழ்த்துகையில், போராட்டம் மத்திய அரசை எதிர்த்துதான். எனவே பாரத பிரதமரை தேர்ந்தெடுத்த வாரணாசி தொகுதி க்கு செல்லும் ரயிலை திட்டமிட்டே இன்று மறித்தோம் என்றார்.
நீர் தேக்கம் எங்கு இருக்கிறதோ அந்த மாகாணத்திற்குதான் அந்த அணை சொந்தம். இது உலக நாடுகள் ஒப்புகொண்ட விதி. இதை அனைத்து மக்களுக்கும் இளைஞர்கள் எடுத்து செல்ல வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். நிகழ்ச்சியை நல்ல கலைமயமாக நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்புக்கு நன்றியையும் தெரிவித்தார் வைகோ.
தகவல்: மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டையார்
No comments:
Post a Comment