தமிழக ஆளுநர் மாளிகைக்கு இன்று 08-10-2016 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சென்றார். வைகோ அவர்கள் ஆளுநருக்குப் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்தார்.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்கள் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தபொழுது எனக்கு மிகச்சிறந்த நண்பர். அப்போதைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தோம். நட்பு அடிப்படையிலான இந்தச் சந்திப்பு 12.50 முதல் 1.30 மணி வரை 40 நிமிடங்கள் நீடித்தது.
இந்தச் சந்திப்பின்போது, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர் செங்குட்டுவன், சிறுபான்மை பிரிவுச் செயலாளர் முராத் புகாரி ஆகியோர் உடன் இருந்தனர் என வைகோ கூறினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment