காவிரி உரிமையை உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் கண்டனத்திற்கு பின்னரும், நிறைவேற்றாத, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று 17-10-2016 மற்றும் இன்று 18-10-2016 ரயில் மறியல் போராட்ட நடபெற்றது.
நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், இன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலும் நடந்தது. இந்த போராட்டத்தில் திரளான தொண்டர்களுடன், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான, வைகோ மற்றும் திருமா அவர்களுடன் ஆர்ப்பாட்ட முழக்கங்களுடன் நடந்து வந்ததை பார்த்த காவல் துறை தடுக்க முற்ப்பட்டனர். பின்னர் தமிழர்களின் நியாமான கோரிக்கையை விளக்கி கூறி தடையை மீறி ரயில் தண்டவாளத்திற்கு தலைவர்களும் முன்னணி நிர்வாகிகளும் சென்றனர்.
பின்னர் தண்டவாளத்தில் அமர்ந்து தலைவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அப்போதும்ம் காவல்துறையினரிடம் போராட்டத்தின் நியாய த் தை வலியுறுத்தி சொல்லி தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் வைகோ மற்றும் திருமா தொண்டர்களுடன்.
சரியான நேரத்தில் வர வேண்டிய காலம் தாமதமானதால், ரயில் வரும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்தார் வைகோ. தொடர்ந்து தண்டவாளத்தில் நடை பயணம் மேற்க்கொண்டனர்.
பத்தரை மணிக்கு வரவேண்டிய ரயிலை மாற்று பாதையில் செல்ல திட்டமிட்ட காவல்துறை, போராட்ட வீரியத்தை கண்டு வரவைத்தது. தளராத போராட்டத்தால் அதே நடைமேடையில் வாரணாசி எக்ஸ்பிரஸ் வந்தது.
தலைவர்கள் வைகோ, திருமா ஆகியோர் தொண்டர்களுடன் வாரணாசி ரயிலை மறித்து ரயில் மீது ஏறி கொடியை ஏந்தி பிடித்து போராட்ட முழக்கங்களை எழுப்பினார்கள்.
பின்னர் ரயிலை மறித்ததால், கைது நடவடிக்கையை காவல்துறை ஆயத்தம் செய்ய தொண்டர்கள் தலைவர்களுடன் கைதாகினார்கள். வழக்கம் போல தொண்டர்களை கைது நடவடிக்கைக்கு ஒழுங்கு படுத்தினார் தலைவர் வைகோ அவர்கள்.
கைது செய்யப்பட்ட அனைவரும் புதுப்பேட்டை வீரபத்ர தெருவில் உள்ள சமூக நலக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
தகவல்: மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டையார், திருப்பதிசாய்.
தகவல்: மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டையார், திருப்பதிசாய்.
No comments:
Post a Comment