தமிழக முதலமைச்சர் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் நாள் இரவில் உடல் நலம் குன்றி சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜெயலலிதா உடல் நலம் தேறி வருவதால் இன்று 08-10-2016 காலை சென்னை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் காலையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வரின் நலனை விசாரித்தார். மேலும் மருத்துவர்கள் குழுவிடமும், லண்டன் மருத்துவரிடமும் ஜெயலலிதா உடல் முன்னேற்றம் பற்றி கேட்டறிந்தார்.
No comments:
Post a Comment