மதிமுக என்னும் பேரியக்கம் உருவாக காரணமாயிருந்த 5 மாவீரர்களுக்கு அவர்களின் நினைவு நாளில் உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தினார்கள் மதிமுகவினர்.
அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வீர் மறவர்கள் எந்த நோக்கத்திற்காக தன்னுயிரை மாய்த்தார்களே அந்த நோக்கம் நிறைவேறும் விதமாக சூளுரைத்தார். அதை கழக கண்மணிகளும் சூளுரையாக குரல் ஒலிக்க எழுப்பினார்கள்.
தலைவர் வைகோ அவர்கள் பேசும்போது, 23 ஆண்டுகளுக்கு முன்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து கொலைப்பழி சுமத்தப்பட்ட பொழுது தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்ட 5 தியாக தீபங்களை நினைவு கூர்ந்து சூளுரை மேற்கொள்கின்றோம்.
தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகின்றது என்று தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றேன்.அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி விட்டன.தற்போது காவிரியில் தண்ணீர் தர வேண்டுமென்று 3 முறை உத்தரவிட்டும் கர்நாடகம் தொடர்ந்து மதிக்கவில்லை.இந்த பேராப்பத்தில் தமிழகம் சிக்கினால் பேரழிவுக்கு ஆளாக நேரிடும் .இது குறித்து கட்சி அடையாளமின்றி 2014 லிலே பிரச்சாரம் செய்தேன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று 9-வருடங்கள் கழித்துக் கூறுவது திட்டமிட்ட துரோகம்.அணை பாதுகாப்பு மசோதா மன்மோகன் சிங் கொண்டு வர முயன்றார்.இதற்கு தற்பொழுது மத்திய அரசு கொண்டுவர முயல்கின்றது.இதை நிறைவேற்றி விட்டால் ஏற்கனவே நம்மை வஞ்சித்து வரும் மாநிலங்கள் நமக்கு தண்ணீர் கொடுக்காது.
இந்த மத்திய அரசு செய்கையை எதிர்த்து வருகின்ற 17,18 தேதிகளில் இரயில் மறியல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கட்சி சார்பற்று அனைவருமே இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காண்பிக்க வேண்டும்.தமிழகத்திற்கு மன்னிக்க முடியாத துரோகத்தை,வஞ்சகத்தை செய்து வருகின்றது என மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்த நிக்ழச்சியில் வைகோ பேசினார்.
இந்த வீர வணக்க நிகழ்வில் கழக முன்னணி நிர்வாகிகள், ஏனைய பொறுப்பாளர்கள், கழக கண்மணிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment