காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் நடுவர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளபடி, காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 20 மற்றும் 30 ஆம் தேதிகளில் உத்தரவிட்டது. அப்போது நீதிமன்றத்தில் அதற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. ஆனால் திடீரென்று அக்டோபர் 3 ஆம் தேதி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது; நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டம் இயற்ற வேண்டும் என்று பின்வாங்கியது.
காவிரி நதிநீர் உரிமையைப் பறிக்கும் வகையிலும், தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலும் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்காத பாரதிய ஜனதா அரசைக் கண்டித்தும்,
தமிழகத்தில் சம்பா சாகுபடியைக் காப்பாற்றத் தேவையான நீரை காவிரியில் திறந்துவிட வலியுறுத்தியும்,
காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை உடனே அமைக்கக் கோரியும்,
அக்டேமாபர் 17, 18 ஆகிய தேதிகளில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்த விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இப்போராட்டத்திற்கு மக்கள் நலக் கூட்டு இயக்க அங்கங்களான மறுமலர்ச்சி தி.மு.கழகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்து பங்கேற்கின்றன.
மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்து பேசி இரயில் மறியல் போராட்டத்தை வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என மக்கள் நலக் கூட்டியக்க தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
வைகோ
பொதுச்செயலாளர் - மதிமுக
ஜி. ராமகிருஷ்ணன் - செயலாளர், சிபிஎம்
தொல்.திருமாவளவன் -தலைவர், விசிக
ஆர்.முத்தரசன் -செயலாளர், சிபிஐ
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment