மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின், மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம், இன்று காலை 10:30 மணிமுதல் நடைபெறுகிறது.
கழகத்தின் அவைத்தலைவர் திரு.திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமை தாங்க பரபரப்புகளுக்கு மத்தியில் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவங்கிற்று.
அப்போது கழக நிர்வாகிகள் மறைவிற்கும், சிவகாசி பட்டாசு விபத்தில் இறந்தவர்களுக்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வுகள் முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வைகோ அவர்கள், எந்த காரணத்திற்காக இரண்டு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதோ மீண்டும் அதே சூழல் தான் உருவாகும். இரு கட்சிகளும் வேட்பாளர்களை மாற்றமின்றி அறிவித்திருப்பது இதை மேலும் உறுதி செய்கிறது. எனவே வரவிருக்கின்ற 3 தொகுதி இடைதேர்தலையும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் தீர கலந்தாய்வு செய்து புறக்கணிப்பது என முடிவு செய்திருக்கிறோம் என அறிவித்தார்.
ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:
Post a Comment